13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் மற்றும் டிரைவர் கைது !

0

கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஓட்டுநர் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கைது.
மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டையில் வசிப்பவர் பாலாஜி. இவர், தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் கல்லல் கிராமத்தில் இருந்த வீடு மற்றும் இடத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்து விட்டு, கல்லல் ஊராட்சி மன்றத்தில் தன்னுடைய பெயருக்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகம்
கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகம்

ஆனால் பாலாஜி பெயருக்கு வரி ரசீது வழங்குவதற்கு கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் 13 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

4 bismi svs

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி, பாலாஜி கல்லலில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த தலைவர் நாச்சியப்பனிடம் பணத்தை கொடுத்தாதகாக கூறப்படுகிறது. அப்போது நாச்சியப்பன் அந்த பணத்தை தன்னுடைய கார் ஓட்டுனர் சங்கரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு அலுவலகம்
இலஞ்ச ஒழிப்பு அலுவலகம்

இதனை தொடர்ந்து, பாலாஜி சங்கரிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான மாவட்ட லஞ்ச ஒழிப்புகாவல்துறை போலீஸார், ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் மற்றும் கார் ஓட்டுனர் சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்..

பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.