அங்குசம் பார்வையில் ‘பரம்பொருள்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘பரம்பொருள்’

தயாரிப்பு: கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ். தமிழக ரிலீஸ்: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன். டைரக்டர்: சி.அரவிந்த் ராஜ். ஆர்ட்டிஸ்ட்: சரத்குமார், அமிதாஷ், காஷ்மீரா பர்தேசி, ரவி வெங்கட், சார்லஸ் வினோத், ஸ்வாதிகா, டி.சிவா, பாலாஜி சக்திவேல், பவா செல்லதுரை. டெக்னீசியன்ஸ்: இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: பாண்டிக்கு மார், எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன். பிஆர்ஓ: நிகில் முருகன்.

Sri Kumaran Mini HAll Trichy

தங்கையின் மருத்துவ செலவுக்காக ரொம்பவே அல்லாடுகிறார் அமிதாஷ். இதற்காக பெரிய பணக்காரர்கள் வீட்டில் கொள்ளையடிக்கிறார். இன்னொரு பக்கம்போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் நேர்மை, நீதியை ஓரமாக உட்கார வைத்துவிட்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் கல்லா கட்டும் களவாணி. இந்த இம்மாரல் ஆக்டிவிட்டீசால் மனைவியும் குழந்தையும் சரத்தைவிட்டுப் பிரிநதுவிடுகின்றனர். உளவுத்துறை போலீஸ் ஒருவர் மூலம், சிலைகள் கடத்தல் கிங்கான ரவி வெங்கட் பற்றியும் இப்போது அவர் உயிருடன் இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார் சரத். அந்த ரவி வெங்கட்டிடம் வேலை பார்த்த ஒருவனை தூக்கினால் லம்பாக பெரிய அமவுண்டை தட்டி, ஊட்டியில் டீ எஸ்டேட் வாங்கி செட்டிலாகிவிடலாம் என கணக்கு போடுகிறார் சரத்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த நேரம் பார்த்து ஒரு நாள் இரவு சரத் வீட்டிலேயே லூட் பண்ண ட்ரை மாட்டிக் கொள்கிறார் அமிதாஷ். ஸ்டேஷனில் வைத்து அமிதாஷை பின்னி எடுத்து, ரவி வெங்கட்டின் லிங்க்கில் உள்ள ஒருவனை கைகாட்டு. டீல் முடிஞ்சா ஃபிப்டி ஃபிப்டி. உன்னோட தங்கச்சியும் சேஃப்டி, நீயும் செட்டிலாகிடலாம் என மிரட்டல் டீல் பேசுகிறார் சரத். அதன் பின் இருவரும் சேர்ந்து காரியத்தில் இறங்கி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை ஒன்றை லபக் பண்ணுகிறார்கள். அதன் பின்னர் நடக்கும் பரமபத விளையாட்டு தான் இந்த ‘பரம்பொருள்’. சும்மா சொல்லக்கூடாது, இந்த வயசுலயும் சரத்குமார் இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு நச்சுன்னு மேட்ச் ஆகிருக்காரு. பக்காவா டிரெய்னிங் முடிச்சு, ஃப்ரெஷ்ஷாக செலக்ட் ஆன இன்ஸ்பெக்டர் மாதிரி ஃபிட்டான பாடி, போலீஸ் கட்டிங், சின்னதா முறுக்கு மீசை என தெறிக்கவிடுகிறார் சரத்.

Flats in Trichy for Sale

“போலீஸ்னாலே நேர்மையா இருக்கணும்னு என் பொண்டாட்டி எதிர்பார்த்தா. நானும் ஆரம்பத்ல அப்படித் தான் இருந்தேன். ஆனால் இங்கே சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கு. அதை என்னால சரிப்படுத்த முடியல. அதான் இந்த ராங் ரூட்ல இறங்குனேன். இதனால கோபப்பட்ட என் பொண்டாட்டி, மகளை கூட்டிக்கொண்டு அவ அப்பா வீட்டுக்கு போயிட்டா” என அமிதாஷிடம் கேஷுவலாக போட்டுத் தாக்குகிறார் சரத். இவர் ஒரு திருட்டுப் போலீஸ் என்பதை ஓப்பனிங்கில் சில சீன்களிலேயே ரெஜிஸ்டர் பண்ணிய டைரக்டர், அதை கடைசி வரை செமத்தியாக மெயிண்டெய்ன் பண்ணிவிட்டார். சரத்துடனேயே டிராவல் ஆகும் அமிதாஷ், தங்கையின் மருத்துவ செலவுக்கு அல்லாடும் நடுத்தர குடும்பத்து இளைஞனாக, அப்பாவியாக பல சீன்களில் பாஸ் மார்க் வாங்குகிறார்.

அமிதாஷை கழட்டி விட சரத்தும் சரத்தை கழட்டி விட அமிதாஷும் போடும் க்ரைம் ப்ளான்கள் அடடே ரகம். பிரிந்து சென்ற சரத் மனைவியின் தங்கையாக காஷ்மீரா பர்தேசி எப்போதும் சோகம் அப்படிக் கிடக்கும் முகத்துடனேயே இருக்கார். க்ளைமாக்ஸில் மட்டும் லேசான புன்சிரிப்பு. சிலை கடத்தல் என்றாலே கோயில் சிலைகளை லம்பா அடிச்சு கப்பல்ல ஏத்துறது, ஃப்ளைட்ல ஏத்துறதுன்னு காட்டாம, ஒரேயொரு சிலைய வச்சு, சிலைகள் கடத்தும் கும்பலின் நெட் ஒர்க், அவர்களின் கொடூர டீலிங், இதையும் சொல்லி, சிலையின் கதையையும் கச்சிதமாக சொல்லிய டைரக்டர் அரவிந்த் ராஜ், சபாஷ் ராஜ்.

கடைசி இருபது நிமிசம் சின்னச் சின்ன ட்விஸ்டுகளை ஸ்கிரீன் ப்ளேவுக்குள் கொண்டு வந்து, நம்பும்படியான க்ளைமாக்ஸையும் வைத்திருக்கிறார் டைரக்டர். பெரும்பாலான சீன்கள் இரவு நேரத்தில், அது டிராவலிங்கில் நடப்பதால், அதற்கேற்ற லைட்டிங் & த்ரில்லிங் மூட் கொண்டு வந்திருக்கிறார் கேமரா மேன் பாண்டிக்குமார். ‘இளைய இசைஞானி ‘ யுவன் சங்கர் ராஜா ஒரு மெலோடி சாங்கில் மட்டும் கவனம் ஈர்த்து, பிஜிஎம்மில் கான்சண்ட்ரேட் பண்ணியிருக்கிறார். படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது பலவீனமா இருந்தாலும் கதையின் நேர்கோட்டுப் பயணம் அதை சரிக்ட்டுகிறது.

–மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.