பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் தருவாரா முதல்வர் ஸ்டாலின்…
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் தரப்பில் முன் வைத்திருக்கிறார்கள்.
2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வருகின்ற மார்ச் மாதம் 14ந்தேதி சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் 25-02-2025 அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு கொள்கை முடிவில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இடம்பெற செய்ய வேண்டும், உறுதி செய்ய வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கியமானதை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :
திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது.
உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேரில் கலந்துரையாடிய இன்றைய முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியை அளித்தார். இது 100 நாளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் 377 வது வாக்குறுதியாக உள்ளது.
அது போல் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என திமுக 153 வது வாக்குறுதியிலும் உள்ளது.
எனவே 10 ஆண்டு என்பதையும் கடந்து, 14 ஆண்டாக தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தற்போது ரூபாய் 12,500 என்ற குறைந்த சம்பளம் வழங்குவதால் வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இந்த குறைந்த சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசியில் அத்தியாவசிய தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியவில்லை. காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் வழங்கினால் மட்டுமே பணி பாதுகாப்பு கிடைக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். நிரந்தரமான வேலை தான் ஒரு குடும்பத்தை உயர்த்தும். பெரும்பாலும் 50 வயதை பலர் கடந்துவிட்டனர். இன்னும் சில ஆண்டுகள் தான் வேலை செய்ய முடியும்.
எனவே அதற்குள் காலமுறை சம்பளம் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அது தான் இத்தனை ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த மரியாதை, கவுரவம் ஆகும்.
மாணவர்கள் கல்வி மேம்படவும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் எதிர்காலம் நலன் கருதி, இந்த பட்ஜெட்டில் காலமுறை சம்பளம் வழங்க நிதி ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2012 முதல் 2021 வரை திமுக வலியுறுத்திய கோரிக்கையை, இப்போது அனைத்து கட்சிகளும் திமுக அரசிடம் வலியுறுத்துகிறது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்கள்.
எனவே, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2021 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் போதும்.
இது தான் முழுமையான பட்ஜெட் என்பதால் இதிலே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திறுக்கிறார் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.