கோவில்பட்டி – தலை நசுங்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மந்திதோப்பு சாலையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல தனது பைக்கில் ரமேஷ் வேலைக்கு கிளப்பியுள்ளார்.

கடலையூர் சாலையில் உள்ள சண்முகா நகர் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி வாகனத்தில் விழுந்து விட்டார். ஈச்சர் வாகனத்தின் பின்புறம் சக்கரம் தலையில் ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஈச்சர் வாகனத்தின் டிரைவர் திருவேங்கடம் குண்டம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிபாரதி.