சாத்தூரில் போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மும்பெரும் விழா !
சாத்தூரில் போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மும்பெரும் விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட சங்கம் ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் மூத்த புகைப்படக் கலைஞர்களை கெளரவிக்கும் விழா என முப்பெரும் விழாவினை போட்டோ வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் சாத்தூர் கிளை நடத்தியது.
இவ்விழாவின் முதல் நிகழ்வாக தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் உப்பத்தூர் ஆரம்ப சுகதார நிலைய மருத்துவ குழுவினர் உதவியுடன் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோர்க்கு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
மேலும் போட்டோ வீடியோகிராபர்களுக்கு பயனுள்ள வகையில் பல தரப்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஆல்பம் டிசைனிங், மாடல்கள் மற்றும் புதிய புதிய வரவுகளை காட்சிப்படுத்தி விற்பனையும் நடைபெற்றது. இங்கு இலவசமாக கேமரா சர்வீஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றிய சேர்மேன் கடற்கரை ராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துரையும் வழங்கினர். மாநில, மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு புகைப்படத் தொழில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிர்வாகிகள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பெருமக்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து இங்கு அமைக்கப்பட்ட போட்டோ ஸ்டால்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.