மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி !
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க உரிமை பெற்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
பொன்முடி எம்.எல்.ஏ ஆனார் – மீண்டும் அமைச்சராகிறார் உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்துச் சபாநாயகர் நடவடிக்கை !
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவரும் அவர் மனைவியும் குற்றவாளிகள் என்று 3 ஆண்டு சிறை தண்டனையும் 50 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவர் மீண்டும் எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாகக் கூறியுள்ள சட்டப்பேரவை செயலகம், தனது எம்.எல்.ஏ பதவியை மீட்கத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தைப் பொன்முடி அணுகலாம் என்று அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ பதவியைப் பொன்முடி மீட்கலாம் என்று சட்டப்பேரவை செயலாளர் கூறியுள்ளார். மேலும் ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாடு சட்டமன்றச் செயலகத்திற்குக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கோவிலூர் சட்டமன்றத்திற்கான இடம் காலியாக உள்ளதாக எழுதிய கடிதத்தைத் திரும்பப்பெற்றார். இதனைத் தொடர்ந்து, கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகப் பொன்முடி நீடிக்க உரிமை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க உரிமை பெற்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாளை (14.03.2024) காலை 10.00மணியவில் பொன்முடி அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பு உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அப்படி அமைச்சராகப் பொன்முடி பொறுப்பேற்றுக் கொண்டால், அவருக்கு மீண்டும் அவர் வகித்த உயர்கல்வி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர்கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இராஜகண்ணப்பன் மீண்டும் பிற்படுத்தப்பட்ட நலத் துறை அமைச்சராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஆதவன்