மதுரையில் கள்ள தொடர்பால் கர்ப்பிணி பெண் வெட்டிகொலை…
முன்னாள் காதலருடன் குடித்தனம் நடத்திய கர்ப்பிணியை அவருடைய கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில், சிறு வயதில் நிச்சயிக்கப்பட்ட தாய் மாமன் வடிவேலுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் அம்ஷத்தை கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையிலும், மதன் உடனான காதலை அம்ஷத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு முன் செக்காணூரணி காவல்நிலையத்தில் மதன் மீது வடிவேலு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மதன் மற்றும் அம்ஷத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், வடிவேலு உடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
போலீசாரின் சமரசத்தை அடுத்து வீடு திரும்பிய அம்ஷத், இரண்டாவது நாளில் 2 பெண் குழந்தைகளை விட்டுவிட்டு மதனுடன் சென்றுள்ளார்.
செககாணூரணி பசும்பொன் நகரில் உள்ள வாடகை வீட்டில் மதனுடன் அம்ஷத் வாழ்ந்து வந்த நிலையில், வடிவேலு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர், மதன்-அம்ஷத்தை வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
6 மாதமாக மதனுடன் சேர்ந்து வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த அம்ஷத், 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவில் சக ஓட்டுநர் ராஜேஷ் உடன் அம்ஷத் வீட்டிற்கு சென்ற வடிவேலு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை அடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் அம்ஷத் மற்றும் மதனை வடிவேலு சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அம்ஷத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செக்காணூரணி போலீசார், அம்ஷத் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதன் கொடுத்த தகவலின் பேரில் வடிவேலு மற்றும் ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தன்னையும், தன் குழந்தைகளையும் விட்டு சென்றதால் மன வேதனையில் இருந்ததாகவும், பழிதீர்க்கவே வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் வடிவேலு வாக்குமூலம் அளித்துள்ளார்.