நடிகை நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பணம் கட்டி ஏமாந்த பெண்ணின் ஆவேச அலறல் ! வீடியோ
மணப்பாறையில் அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அறக்கட்டளைக்கு பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் ஆவேசம்.
நடிகை நமீதா சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவில் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் செயல்பட்டு வரும் ஒரு அருள்தாஸ் அறக்கட்டளையின்; நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தக வெளியிட்டு விழா திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தப்பாட்டம், பேண்டு வாத்தியம், குதிரை நடனம் என நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை சார்பில் மணப்பாறை போலீசாரின் பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகை நமீதா உள்பட சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
வீடியோ லிங்
நிகழ்ச்சியை நடத்திய அருள்தாஸ் அறக்கட்டளை மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறோம் என்று சொல்லி நடிகை சினேகாவை வர வழைத்து பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்தினார். அதன் பிறகு அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர் என குறிவைத்து ஒரு லட்சம் கொடுத்தால் அதை ஒரு கோடியாக திருப்பி வழங்கப்படும் என்று கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரின் பேரில் அருள்தாஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. இருப்பினும் இவரது அறக்கட்டளை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பணம் வசூலித்து வந்ததாக கூறப்பட்டது.பொதுமக்கள் அறக்கட்டளையிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது நீங்கள் அறக்கட்டளைக்குத்தான் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளீர்கள் என்று கூறி சமாளித்து வந்தது.
பணம் கொடுத்து சில ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் கொடுத்த பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என்று பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திருச்சியை கே.கே. நகரைச் சேர்ந்த ஹாஜிரா என்ற பெண் மேடையில் ஏறி தான் 16 லட்சம் கொடுத்துள்ளாதாகவும் சில ஆண்டுகள் கடந்தும் பணம் கொடுக்காத நிலையில் என்னுடைய பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று ஆவேசமாக கூறி திடீரென எழுந்து நின்று உரத்த குரலில் சத்தம்போட்டார்.
அதன்பின்னர் மேடையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தார்.
வீடியோ லிங்
அதன் பின்னர் தனக்கு பணம் வழங்கினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வேன் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனைக்கண்ட அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் பணம் கேட்ட பெண்ணை பார்த்து மிரட்டும் தொணியில் பேசியதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே அச்சஉணர்வு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பெண்ணை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும்பாடு பட்டு ஒரு ஓரமாக அவரை அமர வைத்து நிம்மதிபெருமூச்சுவிட்டனர்.
இதனைப்பார்த்து கொண்டிருந்த பணம் கொடுத்து ஏமாந்த பலரும் கோவத்தை வெளிப்படுத்தி சப்தம் போடவே அங்கிருந்த போலீசாரின் துணையுடன் ரவிச்சந்திரனை வெளியே அழைத்து வந்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் பலரும் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி போலீசார் பாதுகாப்புடன் நடந்து அதில் பிரச்சினை ஏற்பட்டவுடன் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்யாமல் பாதுகாப்புடன் அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சிக்கு போலீசார் பாதுகாப்பு தர மறுத்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களிடம் பல கோடி பணத்தை ஏமாற்றியவரை எப்படி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்பதை சிறப்பு புலான்வு குழு அமைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி திருச்சியின் பிரபல ரவுடி பட்டரை சுரேஷ் மேடையில் அறக்கட்டளை நிர்வாகி மற்றும், நடிகை நமீதாவும் கலந்து கொண்டது போலிசார் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிமியான் மலை ரவிச்சந்திரன் குறித்து ஏற்கனவே அங்குசம் இணையத்தில் வெளியான செய்திகளுக்கான லிங்
மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை
https://angusam.com/luxury-life-on-peoples-money/
அரசு ஊழியர்கள் பணத்தில் கோடீஸ்சுவரரான வசியக்கார ஜோசியக்காரன்!!🧐😱
https://angusam.com/money-targeting-government-employees-astrologer-the-billionaire/