துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிய வருமான வரித்துறையினர் .

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர் . ரொக்கமும் கைப்பற்றியதாக தகவல் .
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் திருச்சி ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மேக்னா சில்க் ஸ். இதன் கிளை நிறுவனங்களாக முசிறி , பரமத்திவேலூர் ,குளித்தலை , உள்ளிட்ட 9 இடங்களில் ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

முசிறியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது அண்ணன் ராமதாஸ் என இருவரும் இதன் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது இவர்களது ஜவுளி நிறுவனங்களில் விற்கப்பட்ட ஜவுளிகளுக்கு இரண்டு விதமான ரசீதுகள் வாடிக்கையாளர்களிடம் தரப்பட்டதாக புகார் எழுந்தததாக கூறப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர் .

 

இதனடிப்படையில் கடந்த 02-11-2022- புதன்கிழமை காலை சுமார் 10-மணியளவில் துறையூர் , முசிறி, பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் உள்ள மேக்னா சில்க் ஸ்மற்றும் மாற்று பெயரில் இயங்கி வரும் இவர்களது ஜவுளி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக , ஒவ்வொரு கடைக்கும் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 நாட்களாக இரவு பகல் என விடிய விடிய சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

நான்காவது நாளான இன்று (05-11-2022) இரவு சுமார் 10 – 30 மணியளவில் வருமான வரிச் சோதனை முடிவுக்கு வந்த நிலையில், கணக்கில் கொண்டு வரப்படாத முக்கிய ஆவணங்களை பெரிய அட்டைப் பெட்டி மற்றும் 6 பெரிய கைப்பை நிறைய அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

மேலும் ரொக்கமும் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் என்னென்ன ஆவணங்கள், எவ்வளவு தொகை என்பதைக் கூற மறுத்து விட்டனர்.

துறையூர் மேக்னா சில்க் ஜவுளிக்கடையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் கொண்டு வரப்படாத ஜவுளிகளின் முக்கியஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றிச் சென்ற சம்பவம் துறையூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.