தேசியத் தலைவராக உயர்ந்து நிற்கும் தளபதி ஸ்டாலின்… புறமுதுகிட்டு ஓடிய ஆர்.என்.ரவி – கனிமொழி எம்பி பேச்சு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், பாஜக – அதிமுக கள்ளக் கூட்டணியை கண்டித்தும், சென்னை மாவட்ட திமுக சார்பில், (07/01/2025) செவ்வாய்கிழமை, சென்னை – சைதாப்பேட்டையில், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினார் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள்!

அவர் பேசுகையில்,  “

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

“ஆளுநர் ரவி மூன்றாவது ஆண்டாக ஹேட்ரிக் அடிச்சிருக்காரு…  எதுலனு கேட்டா… ஸ்கூல் புள்ளைங்கள்லாம் பரிட்சைக்கு படிக்காம போயிட்டு அம்மாகிட்ட டீச்சர்கிட்ட ஏதாவது ஒரு  காரணம் சொல்லும், அதே போலத்தான் ஆளுநர் ரவியும் சொல்லியிருக்காரு. நீங்க வீட்லேர்ந்து லீவு லட்டர் எழுதி அனுப்புங்க. முதலமைச்சர் போனா போகுது வீட்லயே இருனு சொல்லி விட்டுருவாரு.

அதனால தலைவர் கலைஞர் வழியில் வந்திருக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,  ஒவ்வொரு முறையும் ஓட வைக்கிறார்.  நீங்களா வந்து ஏம்ப்பா அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு புறமுதுகிட்டு… அவர் எழுந்தாலே பயந்து ஓடுறீங்களே…

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தமிழ்நாட்டை பற்றி எதுவுமே தெரியாமல் இங்கே வந்துவிட்டீர்கள். சட்டமன்றத்தில் நாங்கள் கடைபிடித்து வருகிற  பாரம்பரியம், பண்பாடு, வழிமுறை, மரபு.  இதுதான் எங்கள் சட்டம். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும், அதற்குப் பிறகுதான் எல்லாம். நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. தேசிய கீதத்துக்கு இடம் இருக்கிறது தமிழ்த் தாய்க்கு பிறகு. நீங்க ஏன் தேசிய கீதத்தைப் பத்தி பேசறீங்கனு எனக்குப் புரியலை. உங்களுக்கும் இந்த நாட்டின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க?

தமிழ்நாட்டில் இருந்து இந்த நாட்டின் விடுதலைக்காக தந்தை பெரியார் உட்பட எத்தனையோ பேர் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.  ஆனால் நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே ஓடி வந்தவர்கள். உங்களுக்கும் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும், தேசிய கீதத்துக்கும் என்ன சம்பந்தம்? அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

இந்த நாட்டைக் காப்பாற்றுவது, நாட்டின் விடுதலையைக் காப்பாற்றுவது. தேசிய கீதத்தைக் காப்பாற்றுவது ஆகியவற்றில் உங்களை விட எங்கள் முதலமைச்சருக்கு அதிகமாகவே தெரியும்.

இன்றைக்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு, நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இன்று ஒரு தேசிய தலைவராக விஸ்வரூபம் எடுத்து நின்று கொண்டிருக்க கூடிய தலைவர்தான் எங்கள் தலைவர்  ஸ்டாலின். அதனால நீங்கள் பாடம் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. நாங்களெல்லாம் பி.ஹெச்.டி. பாஸ் பண்ணிவிட்டோம். நீங்கள் இன்னும் எலிமென்ட்டரி ஸ்கூல்ல காரணம் சொல்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க. அதனால இதெல்லாம் விட்டுடுங்க.

தமிழ்நாடு எத்தனை போராட்டம், உயிர் தியாகத்துக்குப் பிறகு தமிழ்நாடு என பெயர் பெற்றது. இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு தமிழ்நாடுனு சொல்லாதே தமிழகம் என்று சொல் என்று சீண்டுவது…தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களின், தமிழர்களின் உணர்வுகளை, சுமயரியாதையை  அவமானப்படுத்திக்கிட்டே இருப்பீர்கள். நாங்கள் இதை பாத்துக்கிட்டே இருப்போம்னு நினைச்சீங்கன்னா,  நீங்கள் ஓட ஓட விரட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதையெல்லாம் விட்டுட்டு  ஆளுநருக்கு ஏன் அரசியல்? ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவையில்லை, அவசியம் இல்லை, நியாயம் இல்லை. ஆனால் தொடர்ந்து அரசியல் பேசிக் கொண்டு, அரசை விமர்சனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆர்பாட்டம் எங்களுக்காக இல்லை… நீங்கள் இருங்கள். இருந்தீங்கன்னா… பிஜேபி சொல்றாங்கள்ல… எங்கள் ஓட்டு சதவிகிதம் ஏறிக்கிட்டே இருக்குனு. அது ஆளுநரால் ஒவ்வொரு நாளும் இறங்கிக்கிட்டே இருக்கும். அதனால அவரையே ஆளுநராக இங்க வைத்துக்கொள்ளுங்கள்.  ஏனென்றால்;  ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் பரிவாரங்களின் கோர முகத்தை  ஒவ்வொரு நாளும் தமிழனுக்கு நினைவுபடுத்துக் கொண்டிருக்கக் கூடியவராக ஆர்.என்.ரவி இருக்கிறார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நல்லாட்சியை திராவிட மாடல் முதல்வர் அண்ணன் தளபதி நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வதற்கே உங்களுக்கு கஷ்டம். பயம்… திராவிடம் என்று சொன்னாலே அவர்களுக்கு தூக்கத்தில் கனவில் கூட பயம் ஏற்படும் அளவுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சி, நம் முதலமைச்சருடைய ஆட்சி இங்கே நடந்துகொண்டிருக்கிறது.

மூன்றாவது வருடமாக இப்போது சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியே போய்விட்டார்.  நான் கேட்கிறேன்… மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றுகிறீர்கள்.  கேரளாவுல மாத்திருக்கீங்க, மணிப்பூர்ல மாத்திருக்கீங்க, பிகார்ல மாத்திருக்கீங்க. ஏன் இங்க தமிழ்நாட்ல மட்டும் பிடிச்சு வச்சா மாதிரி, சாசனம் எழுதி வச்சா மாதிரி ஏன் இவரை இங்கயே வச்சிருக்காங்க பிஜேபி?

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்… தொடர்ந்து அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கம் திமுக, அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய தலைவர் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள். அதனால்தான் நமக்கு தொடர்ந்து தொல்லை தரவேண்டும், தொடர்ந்து குழப்பங்களை உருவாக்க வேண்டும், தங்களுக்கு ஓட்டு போடாத தமிழ் மக்களை தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் , தமிழ்த் தாயை, நம்முடைய உணர்வோடு கலந்திருக்கக் கூடிய தமிழ் மொழியை,  தொடர்ந்து அவமானப்படுத்தி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவமரியாதை தரவேண்டும் என்பதற்காக இவரை இங்கே கொண்டு வந்து வைத்து…  நமக்கு தொடர்ந்து என்னென்ன இன்னல்களை எல்லாம் செய்ய முடியுமா அவ்வளவையும் செய்துகொண்டிருக்கிறது பிஜேபி ஒன்றிய ஆட்சி.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால்,  எது வந்தாலும் தாங்கி நிற்கக் கூடியவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தோழர்கள். அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்… நீ ஒவ்வொரு நாளும் தரக் கூடிய தொல்லைகளை எங்கள் தலைவரும்,எங்கள் இயக்கமும் படிக்கட்டுகளாக மாற்றி உயர்ந்து உயர்ந்து நீங்கள் இல்லாத நிலையை உருவாக்கிவிடுவோம். நன்றி” என்று உரையாற்றினார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

உடன், திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அந்தியூர் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.தயாநிதி மாறன், திரு.சண்முகம், திரு.கிரிராஜன், திருமிகு.கனிமொழி சோமு, கழக இணை அமைப்புச் செயலாளர் திரு.அன்பகம் கலை, மாவட்ட கழகச் செயலாளர் திரு.நே.சிற்றரசு, மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர்களுமான திரு.மயிலை த வேலு, திரு.சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி, திரு.பரந்தாமன், திரு.கருணாநிதி, திரு.வெற்றியழகன், திரு.எபநேசர், திரு.ஐட்ரீம் மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் திரளான கலந்துகொண்டனர்!

 

—     மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.