திரும்ப வந்துட்டேன்னு சொல்லு … ராகுல் காந்தியின் மாஸ் என்ட்ரி !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு … ராகுல் காந்தியின் மாஸ் என்ட்ரி !

ஏறத்தாழ நான்கு மாத கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் எம்.பி. பதவியை பெற்ற ராகுல் காந்தி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ஆகஸ்டு-08 அன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக முதல் பேச்சாளராக தனது கருத்தை தெரிவிக்க இருக்கிறார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

”சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, தனது தலைமையிலான பாஜக அரசின் சரிவை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறுவடை செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிப்பது என்று முடிவெடுத்தார்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, கர்நாடகா மாநிலம் கோலாரில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, “திருடர்களின் பெயர் எல்லாமே எப்படி மோடி என்றே முடிகிறது” என்று, நீரவ் மோடி, லலித் மோடி-யைக் குறிக்கும் வகையில் பேசியிருந்தார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக, சூரத்தில் வழக்கு தொடுத்தார் வழக்கறிஞரும் சூரத் மேற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோதி.

ஒரு அவதூறு வழக்குக்காக, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அவசியமில்லை என்றும்; அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கும் இதுவல்ல என்றும் கருத்து தெரிவித்தற்காக நீதிபதியையே மாற்றினார்கள். தமக்கு தோதான நீதிபதியை நியமித்து, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வைத்தார்கள். நீதிமன்ற உத்தரவை காட்டி, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியையும் பறித்தார்கள்.

4

ஒன்றுமில்லாத அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டு சிறை தண்டணை வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு குஜராத் உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்ஹா மற்றும் பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்ற வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

”அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை வழங்குவதற்கான காரணத்தை சூரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மனுதாரர் பொது வாழ்வில் தொடர்வதற்கான உரிமையை மட்டும் பாதிக்காது, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் தங்கள் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையையும் பாதிக்கும்.” என்பதாக தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்திற்காகவே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. தற்போது, தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், எம்.பி. பதவியில் தொடரும் நிலை உருவாகியிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி, ராகுலுக்கு எம்.பி. பதவியை மீண்டும் வழங்கக்கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார், காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி. காங்கிரஸ் சார்பில் மக்களவை செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்வதாகவும்; அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

– மித்ரன்.

5
Leave A Reply

Your email address will not be published.