தற்கொலைக்கு லீவு கேட்டு எஸ்கேப் ஆன எஸ்.ஐ. கண்டுபிடித்து இடமாற்றம் செய்த எஸ்.பி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தற்கொலை செய்ய விடுமுறை கேட்டு மாயமான சப்-இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்து போலீசார் சமாதானம் செய்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மகிபால்(வயது 59). இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா,
போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா,

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தான் குற்றம் ஏதும்  செய்யவில்லை எனவும், ஆயுதப்படையில் கடுமையாக வேலை வாங்குவதாகவும், தனக்கு ஓய்வுபெற 6 மாத காலம் மட்டுமே உள்ளதால் மீண்டும் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளிடம் கூறி வந்தார். மேலும் இது தொடர்பாக அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இருப்பினும் அவரால் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகிபால், 04.03.2023 போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் சூப்பிரண்டு அலுவலக போலீசாருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், அதனால் எனக்கு ஒருநாள் விடுமுறை தாருங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பிறகு அவர் திடீரென மாயமானார்.

3
சப்-இன்ஸ்பெக்டா் மகிபாலை
சப்-இன்ஸ்பெக்டா் மகிபாலை

இதைபார்த்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசாரை அனுப்பி மாயமான மகிபாலை கண்டுபிடித்து சமாதானம் பேச உத்தரவிட்டார். அதன்படி போலீசார் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி போலீஸ் குடியிருப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டா் மகிபாலை போலீசார் சந்தித்து சமாதானப்படுத்தினர்.

4

பின்னர் மகிபாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு, அவரை விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.