தைரியமாக தட்டிக்கேட்ட இளைஞர்… நஷ்டஈடு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

தைரியமாக தட்டிக்கேட்ட இளைஞர்… நஷ்டஈடு வழங்கிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஆர் . ரகுராமன் அவர்கள் பட்டிமன்றம் பேச்சாளருக்கு நஷ்டஈடு வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் கடந்த எட்டாம் தேதி பொது மக்கள் சார்பாக நடந்த கபடி போட்டிக்கு வருகை தந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் வந்திருந்தனர். அப்போது கபடி போட்டியினை தொடங்கி வைத்து சிறிது நேரம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனது காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

ஆனால் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த இருசக்கர வாகனத்தை சட்டமன்ற உறுப்பினரின் வாகனம் தெரியாமல் இடித்துள்ளது இதில், இரு சக்கர வாகனம் கீழே விழுந்து குறிப்பிட்ட பாகங்கள் உடைந்துள்ளது, அந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர், வெகு தொலைவில் தனது இரு சக்கர வாகனம் சட்டமன்ற உறுப்பினர் கார் தட்டியதை பார்த்து பின்னால் தகவல் தெரிவிக்க வந்துள்ளார். அதற்கு முன்பாகவே சட்டமன்ற உறுப்பினரின் வாகனம் கிளம்பி சென்றுள்ளது, அந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர், புதுசுரங்குடியைச் சேர்ந்த இளம் பட்டிமன்றம் பேச்சாளர் கார்த்திக் குமார், வயது 24 அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று உள்ளார்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ .ஆர். ஆர் .சீனிவாசன் 
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஆர் . ரகுராமன்

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

5

அப்போது சட்டமன்ற உறுப்பினரின் முகநூல் பக்கத்திற்கு சென்று அவருடைய தொலைபேசி எண்ணை எடுத்து சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு உள்ளார். மறுமுனையில் தொலைபேசியை எடுத்த சட்டமன்ற உறுப்பினரிடம் சார் நான் புதுசூரங்குடி கிராமத்திலிருந்து கார்த்திக் குமார் பேசுறேன், மேட்டமலையில நடந்த கபடி போட்டிய பாக்குறதுக்கு என்னுடைய பைக்கை எடுத்துட்டு வந்திருந்தேன், அங்கு ஒரு ஓரமா என்னோட பைக்கை நான் நிப்பாட்டி வச்சிருந்தேன், அப்போ உங்களுடைய கார் என்னுடைய பைக்கை சிறிது உரசி கீழே சாய்ந்து என்னுடைய பைக்ல குறிப்பிட்ட பாகங்கள் உடைந்து விட்டது நான் அதை உடனே பாத்துட்டு தகவல் தெரிவிக்க ஓடி வந்தேன் பக்கத்துல ரேடியோ சத்தம் அதிகமா இருந்ததுனால அது உங்களுடைய ஓட்டுனருக்கும் உங்க கூட வந்தவர்களுக்கும் சத்தம் கேட்கல சார், நான் ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்தை சேர்ந்தவன், என்னோட வருமானத்தை நம்பி தான் சார் என் குடும்பமே இருக்கு என்னுடைய இந்த இரு சக்கர வாகனத்தை பழுது நீக்கம் செய்கிற அளவுக்கு கூட கையில பணம் இல்ல பார்த்து கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் என தெரிவித்தார்.

கார்த்திக் குமார்
கார்த்திக் குமார்

மறுமுனையில் பேசிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர் . ரகுராமன் அவர்கள், தம்பி உன்னுடைய இருசக்கர வாகனம் கீழே விழுந்ததை நானும் என்னுடைய ஓட்டுனரும் கவனிக்கவில்லை கவலைப்படாதே உன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு எவ்வளவு பொருள் சேதம் அடைந்ததோ அதை என்னுடைய அலுவலகத்திற்கு வந்து என்னிடம் நீ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். உடனடியாக நேரில் சென்ற கார்த்திக் குமார் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து தனது இரு சக்கர வாகனத்தின் உடைந்த பகுதியை மாற்றுவதற்கான தொகையை பெற்றுள்ளார்,

7

தான் இருக்கும் இடம் பதவி பணம் எவ்வளவு பெரியது என்பது முக்கியமில்லை, தன் மனசாட்சி படி செய்யும் நல்ல செயல்கள் மட்டுமே அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை இந்த உலகம் அறியும், இந்த சம்பவத்தில் பெருந்தன்மையுடன் இழப்பீடு வழங்கிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், இழப்பீடு கேட்ட கார்த்திக் குமார் அவர்களுக்கும் ஒரு சல்யூட்,

 

-B. மாரீஸ்வரன்

6
Leave A Reply

Your email address will not be published.