வெக்கி தலை குனிந்தேன் ? – திருச்சியின் மூத்த பத்திரிகையாளர் வேதனை !

0

வெக்கி தலை குனிந்தேன் ? – திருச்சியின் மூத்த பத்திரிகையாளர் வேதனை !

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தலைவரும், விடுதலை நாளிதழின் மாவட்ட செய்தியாளருமான, விடுதலை – பாலு என்கிற செந்தமிழினியன் தனது மன வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சில பத்திரிகையாளர்கள் மேற்கொள்ளும் விரும்பத்தகாத சில நடவடிக்கைகளின் காரணமாக, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்குமே தலைக்குணிவை ஏற்படுத்திவிடுவதாக, வேதனை தெரிவித்திருக்கிறார் அவர். அவர் வெளியிட்டுள்ள பதிவில் …

”பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்! நேற்று காலையில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கிய மஹாலில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட ( OBC) வகுப்பு பணியாளர் நல சங்கம் சார்பில் 12 – ஆம் ஆண்டு மாநில மாநாடு நடத்தினார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த மாநாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும் மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டது அதுவும் என் மூலமாக கொடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி நடைபெறும் போது மதியம் 12.30 மணிக்கெல்லாம் 30-க்கும் மேற்பட்டோர் பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்துவிட்டனர்.

OBC சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி என்னிடத்தில் மிகவும் வருத்தப்பட்டார். திருச்சியில் என்ன இப்படி நடந்து கொள்கிறார்கள்? பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் வந்து கட்டாயப்படுத்தி கேட்கிறார்கள். என்னை சூழ்ந்து கொண்டார்கள். எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. என்றெல்லாம் அவர் என்னிடத்தில் சங்கடத்தோடு முறையிட்டார்.நான்என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்து விட்டேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திரு .கோ.கருணாநிதி அவர்கள் திராவிடர் கழகத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ளவர். தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணிக்கு உற்ற தோழர். அதன் அடிப்படையில் என்னிடத்தில் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் ஏன் அதில் தலையிட்டேன் என்கிற அளவிற்கு எனக்கு மிகவும் மன வேதனை ஏற்பட்டது. நான் ஏற்கனவே, அவர்களிடத்தில் குறிப்பிட்டது அழைப்பு விடுத்த பத்திரிகை – ஊடகத்தினரை தவிர வேறு யாரையும் நீங்கள் அனுமதிக்க வேண்டாம். வரக்கூடியவர்கள் செய்திகள் எடுத்து கொண்டு செல்வார்கள் என்று தெரிவித்திருந்தேன்.

நானும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த கூத்தையெல்லாம் கவனித்தேன். அருள் கூர்ந்து நீங்கள் எந்தப் பத்திரிக்கையில் வேண்டுமானாலும் வேலை செய்யுங்கள். பத்திரிகை பேரில் பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள். அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், பொது நாகரிகம், தனிமனித ஒழுக்கம் என்பது மிக மிக அவசியம்.

அழையாத வீட்டிற்கு நுழையக்கூடாது? என்கிற நாகரிகம் தெரியாமல் அழைக்கப்படாத ஒரு நிகழ்ச்சியில், நீங்களாகவே சென்று நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பணம் கேட்பது வெட்கக்கேடானது. திருச்சியில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக எங்களிடத்தில் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், அதை கட்டுப்படுத்த முடியவில்லை என பலரும் சொல்லி கஷ்டப்படுகிறார்கள். இது நீடித்தால், ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.ஆர்.ஓ. மூலமாக காவல்துறை அதிகாரிகளுக்கு முறையான புகார் மனு அனுப்ப வேண்டி இருக்கும் .

இதுபோன்று நடந்து கொள்வது உண்மையான பத்திரிக்கையாளரின் கடமையா? இது நாகரீகமா? என்பதை நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். இத்தனை பேர் வந்தீர்கள் வாங்கினீர்கள் யார் யார்? செய்தி போட்டீர்கள் என்று நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்னிடத்தில் ஒரு பதிவினை போட்டு கேட்டார்கள். நான் என்ன பதில் சொல்வது எனக்கு தெரியவில்லை. செய்தி போட்டிருந்தால் அருள் கூர்ந்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாளருக்கு அந்த செய்தி தொகுப்பினை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

பத்திரிக்கை ஊடக தர்மத்திற்கு விரோதமாக யார், இது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் நீண்ட காலம் நீடிப்பதில்லை. காணாமல் போய்விடுவார்கள் என்பது உண்மை. உண்மையான பத்திரிகையாளர்களாக செயல்படுங்கள். அதில் நேர்மையோடும் கடமையோடும் பணியாற்ற குறைந்தபட்சமாவது முயற்சி செய்யுங்கள்.

உங்களில் சிலரின் செயல்பாட்டால் உண்மையான பத்திரிக்கையாளர்கள் வெளியில் தலை காட்ட முடியவில்லை. நான் இந்த பதிவை பதிவிடுவதற்கு சங்கடமாக இருக்கிறது. உங்களது பொருளாதார சூழ்நிலையும் நான் உணர்கிறேன். இருப்பினும், ஒரு கட்டுப்பாடு மிக மிக அவசியம். அந்த கட்டுப்பாடு இல்லையென்றால், இது போன்ற சங்கடங்கள் கட்டாயம் ஏற்படும். யாரும் வருத்தப்பட தேவையில்லை. மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.” என்று பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், விடுதலை – பாலு (எ) செந்தமிழினியன்.

-மித்ரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.