உணவகங்களில் கொட்டிக் கிடக்கும் சர்வீஸ் வேலை ! தொடர் – 6

உணவக மேலாண்மை தொடர் - 6

0

உணவகங்களில் கொட்டிக் கிடக்கும் சர்வீஸ் வேலை… உணவக மேலாண்மை தொடர் – 6 இன்று ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் அல்லாமல் Stand alone restaurant எனப்படும் தனியாக இருக்கும் உணவகங்களுக்கு மக்கள் அதிகமாக விரும்பி செல்கின்றனர்.

ஒவ்வொரு உணவகமும் தனித்துவத்துடன் செயல்பட்டு வருகின்றன, அவற்றுள் Fine dining restaurant மற்றும் Quick Service Restaurant என்பவை பொதுவாக இரு முக்கிய உணவக மாக கருதப்படுகிறது. FMCG எனப்படும் Fast Moving Consumer Goods என்ற தலைப்பில் அதிகமாக நுகரப்படும் பேஸ்ட் பிரஸ் போன்றவை வந்தாலும்,சில்லறை விற்பனையாகும் உணவுவகைகள் சிலவற்றையும் இந்த தலைப்பில் கொண்டுவரலாம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

உதாரணமாக பேக்கரி பொருட்கள்,இனிப்பு மற்றம் காரம் போன்றவை இந்த கால கட்டத்தில் அதிகம் நுகரப் படுகின்றது. அதை பற்றி நாம் அடுத்த இதழில் பார்ப்போம் ஆனால் இப்பொழுது உணவகத்தில் அதிகமாக வேலை வாய்ப்பு உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்வோம் ஸ்டார் ஹோட்டலில் அல்லாமல் தனியாக பல உணவகங்கள் செயல்படுவது நாம் அறிந்ததே.

இன்று சாலையோரங்களில் அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் பிரபலமாக இருக்கின்றது நான் படித்த காலத்தில் எனது மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட் சாலையோர உணவகங்களை மேம்படுத்துவது எப்படி என்பதேயாகும் எங்கள் ஆசிரியர் ஐயா சண்முக சுந்தரம் அவர்கள் மிக நேர்த்தியாக எங்களை வழிநடத்தி அந்த ப்ராஜெக்ட்டை கொண்டு சென்றார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இன்றைக்கு நாம் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில் இருக்கும் அதிகப்படியான உணவகங்களை பார்க்கும்பொழுது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிகமான தேர்வுகள் உள்ளது என்ற மகிழ்வே நமக்கு வருகிறது.

அதிலும் அன்றைய காலகட்டத்தில் (1990களில் கூட) சுத்தம் சுகாதாரம் என்பது சாலையோர கடைகளில் மிகவும் குறைவாகவே இருந்தது. இன்றளவில் பொதுவாகவே மக்களுக்கும் சுத்தம் சுகாதார விழிப்புணர்வு அதிகம் அதுமட்டுமல்லாமல் பல உணவகங்களும் மிகவும் நேர்த்தியாகவும் தரமாகவும் செயல்பட்டு வருகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Fine dining restaurant என்பது நிதானமாக என்ன வேண்டும் என்று கேட்டு, இருக்க வைத்து பொறுமையாக பரிமாறுவது ஆகும். அங்கு நிதானமாக நேரம் செலவிடலாம் மற்றும் சேவைத்தரம் உயர்வாக இருக்கும், சற்று விலையும் கூடுதலாக இருக்கும். ஆனால் Quick Service Restaurant பொறுத்தவரை, சொன்னவுடன் உடனடியாக மீல்ஸ் வெரைட்டி ரைஸ் போன்றவை வந்துவிடும். இந்த இரு வகை உணவகங்களிலுமே Kitchen, Service மற்றும் Housekeeping போன்ற துறைகளில் அதிகமாக வேலை வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் இன்றைய கால கட்டத்தில் எல்லா உணவகங் களிலும் நல்ல சர்வீஸ் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சர்வீசுக்கு வெயிட்டரில் இருந்து மேனேஜர் வரை ஆட்கள் நிறைய தேவைப்படுகின்றனர் நல்லதொரு உணவை மோசமானதாக மாற்றுவதும் சுமா ரான உணவை வைத்து அற்புதமான அனுபவத்தை கொடுப்பதும் பரிமாறுபவர் கையில்தான் இருக்கிறது. சிறு பயிற்சியும், விருந்தோம்பல் எண்ணமும் இருந்தால் நல்ல சேவையை செய்யலாம், வாடிக்கை யாளரிடம் நற்பெயரும் எளிதாக பெறலாம். இன்றைக்கு Shoping maal-களிலும் நிறைய உணவகங்கள் வந்துவிட்டன.

ஒவ்வொருவரும் தனித்துவமாக செயல்படுத்துகின்றனர் ஒவ்வொரு வகையான உணவை எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சினிமா தியேட்டர்களில் என எல்லா இடங்களிலும் உணவகம் வந்து கொண்டிருக்கிறது ஏன் சில கம்பெனிகளில் கூட தனியார் உணவகத்திற்கு வாடகைக்கோ அல்லது ஒப்பந்தத்திற்கோ விடுகிறார்கள் பெரிய நிறுவனங்களில் இது மிகவும் அதிகம். இப்படி வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் Hotel management படிப்பில் மேற்கொண்டு எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை அடுத்த இதழ்களில் பார்ப்போம்.

-தமிழூர் இரா. கபிலன்

பயணத்துறையில் வேலைவாய்ப்பு… உணவக மேலாண்மைத் தொடர் – 5

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.