‘‘வேள்வியும், மழையும்!”

0

‘‘வேள்வியும், மழையும்!” – திருச்சி தி. அன்பழகன்

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் சார்ந்த தி. அன்பழகன் விடுதலை ஞாயிறு மலரில் வெளியிடப்பெற்ற தன் கட்டுரைகளை சமூக மாற்றத்தில் தந்தை பெரியார் என்னும் பெயரில் நூலாக்கம் செய்து வருகிறார். அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “வேள்வியும் மழையும்” என்ற கட்டுரை இன்றைக்கும் பொருந்தி வருவது வியப்பாக இருக்கின்றது. நம்ம திருச்சி வாசகர்களின் பார்வைக்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

https://businesstrichy.com/the-royal-mahal/

‘தினமலர்’ நாளிதழில், மழை நல வேள்வி மையம் சார்பாக, 25-2-2006-இல், திருச்சிராப்பள்ளியில் மகாசிவராத்திரி சித்தர் மரபு சிறப்பு யாகம்’ நடத்தப் போவதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இவ்வேள்வி மையம் சார்பாகச் செய்தியாளர்களிடம் பேராசிரியர் அறிவொளி மற்றும் முனைவர் சத்தியசீலன் ஆகியோர்

கீழ்க்கண்ட செய்தியைத் தெரிவித்தனர் :

‘‘யாகங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் என்பது இலக்கியங்களில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. யாகத்தீயில் போடப்படும் மருத்துவக் குணம் கொண்ட மூலிகைப் பொருள்கள், பசு நெய், இன்னும் பிற ஹோமத் திரவியங்களிலிருந்து பெறப்படும் அக்னி மற்றும் புகைக்கு மருத்துவக் குணமும் மழையை வரவழைக்கச் செய்யும் ஆற்றலும் உண்டு. வேள்விப் புகை சுற்றுச் சூழல் மாசை நிலைப்படுத்திச் சுவாசக் காற்றின் ஜீவசக்தியை அதிகரிப்பதோடு இன்னும் பிற நன்மைகளையும் செய்கிறது” – இதுதான் மழை நல வேள்வி மையத்தாரின் தூறல் மொழிகளாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பேராசிரியர் அறிவொளியும் முனைவர் சத்தியசீலனும் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்களுமாவர். யாகங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த ஆன்மிக நிகழ்ச்சிகள் என்று எந்த எந்த இலக்கியங்களில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது என்பதை இந்த இலக்கிய மேதைகள் சொல்லித் தொலைக்கவேண்டாமா? முதலில், இவர்கள் குறிப்பிடும் யாகங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.
கள், சாராயம் முதலியவற்றைக் குடிக்கும் யாகத்தின் பெயர் ஸெத்ராமணி என்பதாகும்.
இந்திரனுக்காக ஆட்டைக் கொல்லும் யாகம் அய்ந்த்ரபசு என்பதாகும்.

மாடுகளைக் கொல்வது கோஸவம் எனப்படும் யாகமாகும்.
வெள்ளைப் பசுவைக் கொல்வது வாயவீயஸ் வேதபக எனப்படும் யாகம் ஆகும்.
கன்றுக்குட்டியைக் கொன்று நடத்தும் யாகம் வத்ஸோபகரணம் என்பதாகும்.
மனிதனைக் கொன்று நடத்துவது புருஷயஜ்ஞ எனும் யாகமாகும் .
இவ்யாகங்களின் வரிசை முறையைப் பின்பற்றி அமைந்த சொற்றொடர் தான் ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதை” என்பதாகும். பொதுவாக, ஆடு, மாடு, குதிரை, மனிதர் ஆகியோரை நெருப்பில் போட்டுக் கொல்வதை அடிப்படையாகக் கொண்டதே யாகங்களின் முறையாகும் என்பதை யஸுர் வேதம் தெளிவுபடக் கூறுகிறது.

இனி, யாகங்கள் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

மரத்தால் செய்யப்பட்ட ஆயுதமான தம்பம் நடப்படும்.
இத்தம்பத்தில், பலியிடப்படவிருக்கும் விலங்கோ அல்லது மனிதனோ கட்டப்பட வேண்டும்.
தம்பத்திற்கு வெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.
பலியிடப்படும் உயிர்களுக்கு வழிகாட்டும் வகையில் நெருப்பு எடுத்துச் செல்லப்படும்.
பலியிடப்படும் உயிர்களுக்கு விருப்பமான உணவு வழங்கப்படும்.
பலியிடும் உயிர் அர்ச்சகரிடம் கொடுக்கப்படும்.

யாகம் நடத்த உரிமை பெற்ற 17 பார்ப்பனப் புரோகிதர்களின் கட்டளைக்கு ஏற்ப உயிர்ப் பலி நிறைவேற்றப்படும்.
‘மனோதம்’ – என்னும் சடங்குப்படி பலியிடப்பட்ட உடல் 36 பாகங்களாகப் பிரிக்கப்படும். இந்த 36 – பாகங்களில் உள்ள பெரும்பான்மையான பாகங்களைக் கொண்ட மாமிசங்களைப் பார்ப்பனர்களே எடுத்துக் கொள்வர்.
இப்படிப்பட்ட யாகங்களின் மூலம்தான் மழைவரும் என்று இந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் கொட்டோ கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துள்ளனர். வள்ளுவப் பெருந்தகை, புலால் மறுத்தல் அதிகாரத்தில்,
‘அவசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்துண்ணாமை நன்று” (குறள் : 259)
எனும் குறள் மூலம் உயிர்க் கொலையைக் கண்டித்துள்ளது இவர்களது கண்களுக்குப்படவில்லையா?
யாகத் தீயில் போடப்படும் மூலிகை பொருட்களை் எவை எவை என்பதை இந்த இரட்டையர்கள் ஏன் சொல்லவில்லை? யாகங்களில் மூலிகைப் பொருட்கள் போடப்படுவதாக இவர்கள் எங்கிருந்து கற்றார்கள்?

சூரியனைச் சுற்றிவரும் பூமி, ஏப்ரல், மே மாதங்களில் சூரியனுக்கு மிக அருகில் நெருங்கி வருவதால் வெப்பத்தால், கடல் நீர் ஆவியாகிக் கார்மேகமாகி விடுகிறது. இம்மாதங்களில் சூரிய வெப்பம் அதிகமாக இருப்பதால் பூமியில் உள்ள ஈரப்பசையுள்ள காற்று உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகப் பூமியில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெற்றிடம் ஏற்படுகிறது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்குக் கடலில் இருந்து ஈரப்பசையுள்ள காற்று தென்கிழக்காகப் பூமியை நோக்கி ஓடும். பூமியில் படும் தென்கிழக்குப் பருவக் காற்று தென் மேற்குப் பருவக் காற்றாகத் திசை திருப்பி விடப்படுகிறது.

இத்தென் மேற்கு பருவக் காற்றால் அஸ்ஸாமின் சிரபுஞ்சி அதிக மழையைப் பெறுகிறது. இதற்குக் காரணம் அங்குள்ள அடர்ந்த காடுகளேயாகும் எனக் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் இத்தென்மேற்கு பருவக் காற்றால் ஓரளவு நன்மை கிடைக்கிறது. ஆனால் இடைப்பட்ட பகுதியில் இப்பருவக் காற்றைத் தடுக்கும் உயர்ந்த மலைகளோ, மழையை வரவழைக்கும் காடுகளோ இல்லாததால் அவை மழை மறைவுப் பிரதேசங்கள் எனப்படுகின்றன. இவ் அறிவியல் அடிப்படையில் தான் அரசாங்கம் மரம் நடுவோம்! – எனச் சுவர்தோறும் விளம்பரம்செய்கிறது ‘‘வேள்வி நடத்துவோம்! வேண்டிய மழை பெறுவோம்!!” – எனும் கேலிக்குரிய மூடமொழியைப் பொழியும் மழை நல வேள்வி மையத்தின் இந்த இரட்டையர்களை, மனிதனைக் கொல்லும் புருஷ யஜ்ஞ யாகத்தில் பலியிட்டுப் பார்க்கலாம் என்பது, விபரீதமான பரிசோதனையாக முடிந்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.