45 ஆண்டுகளுக்குப் பிறகு…..தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்….

1
செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்குமா? தமிழ்நாடு சட்டமன்றக் காங்கிரஸ் குழுவின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் நியமனம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலிமை பெற வைக்குமா? என்பதை அலசுகிறது இச் செய்திக் கட்டுரை.

https://businesstrichy.com/the-royal-mahal/

சிற்றூரிலிருந்து அரசியல் களத்திற்கு…

1964ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள மணிமங்கலம் என்னும் சிற்றூரில் கு.செல்வப்பெருந்தகை குப்புசாமி மற்றும் இராசம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தன் முதுகலைப் படிப்பை முடித்து, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பைப் படித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றப் பார் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், தனது வங்கிப் பணியை விடுத்து அரசியல் வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அரசியல் வாழ்வு – சட்டமன்ற உறுப்பினர்

செல்வப்பெருந்தகை தனது அரசியல் வாழ்க்கையைப் பூவை மூர்த்தியின் தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் தொடங்கினர். பின்பு அதில் இருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார். அதன் பின்பு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். விசிக சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற விசிக குழுவின் தலைவராகவும் விளங்கினார். அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார்.

தாவல் பெருந்தகை – விகடன்

அதன் பிறகு 2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவரானர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகப் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். அப்போது செல்வப்பெருந்தகையை “தாவல் பெருந்தகை” என்று ஆனந்த விகடன் கட்டுரை எழுதியிருந்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011ஆம் ஆண்டு செங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு திருபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவராகவும் இருந்தார். 2024 பிப்ரவரி 17ஆம் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராகச் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை வகித்துவந்த சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பு துணைத்தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இராகுல்காந்தி பரிந்துரை

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கே.எஸ்.அழகிரி பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, இளைய தலைமுறையைச் சார்ந்த செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல்காந்தியின் பரிந்துரையின் பெயரில்தான் செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின் வேணுகோபால் கூறியுள்ளார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு…..

1979ஆம் ஆண்டு பட்டியலினம் சார்ந்த எல்.இளையபெருமாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் தொடர்ந்து மரகதம் சந்திரசேகர் தலைவராகவும் இருந்துள்ளார். 45 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பட்டியலினம் சார்ந்த செல்வப்பெருந்தகை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

போராட்டங்களால்தான் கட்சி வளர்ச்சி….

தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது,“காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி என்பது போராட்டங்களை முறையாக நடத்துவதன் மூலம்தான் சாத்தியப்படும். அண்மையில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினோம். ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுத்தோம். இந்தச் செய்தியை ஆளுநர் மாளிகை பத்திரிக்கைகளில் செய்திக் குறிப்பாக வெளியிடவில்லை. இது குறித்து நாங்கள் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டோம். உடனே ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு, எங்களின் சமூக ஊடகப் பதிவை நீக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். போராட்டம் ஒன்றின் மூலம்தான் கட்சி வளர்ச்சி பெறவும் எழுச்சிகொள்ளவும் முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களையும் ஈர்க்கவேண்டும்

செல்வப்பெருந்தகை போராட்டங்களால்தான் கட்சியை வளர்க்கமுடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியே வளர்ந்துவரும் இளைஞர்களை ஈர்க்கும் கட்சியாகவும் காங்கிரஸ் செயல்படச் செல்வப்பெருந்தகை வழிகோலவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடம் இருக்கின்றது என்ற உண்மையையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Nedunchezhian T says

    நன்றி

Leave A Reply

Your email address will not be published.