தமிழர் தம் கலைகளை மீட்காமல் பண்பாட்டுரிமை இல்லை – லாரன்சு அண்ணாதுரை

0

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை சார்பில் தமிழ்க்கூடல்நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில் மனிதகுலப் புலம்பெயர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஓதல்பகையே தூதிவை பிரிவே’ என்ற தொல்காப்பிய வரிகள் கல்வி, தூது காரணமாகப் புலம்பெயர்வு நடந்ததைக் குறிப்பிடுகிறதுஎன்று குறிப்பிட்டார். ஆசுதிரேலியத் தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மையத்தின் மற்றும் இயக்குநருமான லாரன்சு அண்ணாதுரை அவர்கள் தலைவர் ‘புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியும் தமிழர் மரபுக்கலைகளும்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், ஆசுதிரேலியா தமிழ்ப் பள்ளியில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பறையிசை, கைச்சிலம்பாட்டம் ஆகிய தமிழ்ப் பண்பாட்டுக் கலைகள் நடந்தபோது ஏற்பட்ட ஈர்ப்பில் மொழி. பண்பாடு, கலைகளைப் பேசுவது முக்கியமல்லஅதைக்காட்சிப்படுத்துதல் அவசியம் என்பதை உணர்ந்தேன்.

தமிழ்க்கூடல்நிகழ்வு
தமிழ்க்கூடல்நிகழ்வு

திண்டுக்கல்லில் இருந்து 5 பறையிசைக் கருவியைக் கொண்டு சென்றேன் ஆசுதிரேலியாவில் பறையிசையை நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். தனிநபர் சிந்தனையைக் குறுகிய காலத்தில் முன்னெடுத்தோம். கற்றுக்கொண்டே கற்பிக்கப்பட்ட ஒற்றைச் சிந்தனை பரவலாக்கப்பட்டது. இந்தச் சிந்தனையுடன் இணைந்து 10க்கும் அதிகமான தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து 60க்கும் அதிகமான கட்டணமில்லாத் தொடர்பயிற்சி முகாம்களை நடத்தினோம். தமிழர் தம் கலைகளை மீட்காமல் பண்பாட்டுரிமை இல்லை. பண்பாட்டுரிமையை மீட்காமல் மொழியுரிமை இல்லை. மொழியைக் கொண்டு சேர்க்கப் பண்பாட்டுக் கூறுகள் அவசியம் தமிழரின் தொன்மை, மரபு சார்ந்த கலைமீட்கப்படவேண்டும் என உறுதிமொழி எடுத்தோம். இன்னும் 5.6 ஆண்டுகளில் ஆசுதிரேலியாவில் கலைக்கான, மொழிக்கான தேசியக் கட்டமைப்பு உருவாகும்” என்று குறிப்பிட்டார். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞர் முனைவர் சோமசுந்தரி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்விற்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஷாகுல்.

படங்கள்: ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.