தடம் மாறும் டீன்ஏஜ்!

2

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

தடம் மாறும் டீன்ஏஜ்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 65 வயதான மூதாட்டி கொலை வழக்கில், ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொலைக்குற்றவாளிகள் நால்வரை கைது செய்தி ருக்கிறார்கள். கிருஷ்ணன் (வயது-20), மோகன்ராஜ் (வயது 18), விக்ரம் (வயது 20), ஆறுமுகம் (வயது 20) ஆகிய நால்வருள் விக்ரமை தவிர மற்ற மூன்று பேரும் கல்லூரி மாணவர்கள். அரசு கலைக்கல்லூரி ஒன்றில் வரலாற்றுத்துறையின் மூன்றாமாண்டு மாணவர்கள்.

2

கடந்த மே-17ஆம் தேதி ராஜேஸ்வரி அவரது வீட்டிலேயே கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் பிணமாக கண்டறியப்பட்டார். மூத்தமகன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, கணவர் கருப்பண்ணன் இறந்துவிட, மகன் மணிகண்டன் மற்றும் மகள் பிரியாவை தனிநபராக இருந்து வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார். கணவர் இல்லாத நிலையில் நிலையான வருமானமற்ற சூழலில், பூர்வீக சொத்து ஒன்றை விற்ற வகையில் கிடைக்கப்பெற்ற பணத்தைக் கொண்டு அக்கம்பக்கத்தினருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறார் ராஜேஸ்வரி.
சொந்தமாக மளிகைக்கடையும், மருந்துக் கடையும் வைத்து நடத்திவரும் மணிகண்டன் நாமக்கல் வளையப்பட்டியில் செட்டிலாகிவிட, மகள் பிரியாவை திருமணம் முடித்து கொடுத்துவிட, தொட்டியத்தில் உள்ள வீட்டில் தனியாகவே வசித்து வந்திருக்கிறார், ராஜேஸ்வரி. நடைஉடையோடு இருக்கும் வரையில் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை, காலம் வரும்போது நானே வருகிறேன் என்பதாக மகன் மகளிடத்தில் சொல்லியிருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுக்கிறார், மகன் மகள் உடன் இல்லை, வீட்டில் தன்னந்தனியாகத்தான் இருக்கிறார் என்பதையெல்லாம் நோட்டமிட்டுத்தான் கொலையில் ஈடுபட்டிருக்கின்றனர். 63 பவுன் நகை, 10 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதிலிருந்து, ஆதாயத்துக்கான கொலை என்பதாகத்தான் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

 கிருஷ்ணன், விக்ரம், ஆறுமுகம், மோகன்ராஜ், அசாரூதீன்
கிருஷ்ணன், விக்ரம், ஆறுமுகம், மோகன்ராஜ், அசாரூதீன்
3

தற்போது, கைது செய்யப்பட்ட நால்வரிட மிருந்தும் 38 சவரன் நகைகள், 80 கிராம் வெள்ளி, 1 ஐபோன், 48,000 ரொக்கம், 4.5 இலட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, குற்றவாளி கிருஷ்ணன் என்பவரது அண்ணன் மற்றும் அவரது தாயாரை ராஜேஸ்வரி மரியாதைக்குறைவாக திட்டி அவமானப்படுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலிருந்துதான் நண்பர்களை சேர்த்துக்கொண்டு கொலை செய்ததாகவும் கிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொலைக்குற்றவாளிகள் நால்வரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால், கிருஷ்ணனின் வீடு கொலையான ராஜேஸ்வரி வீட்டிற்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. அப்படி இருந்தும், இடைப்பட்ட ஐந்து மாத காலத்தில், போலீசாரின் சந்தேக வளையத்திலிருந்து இவர்கள் எப்படி தப்பினார்கள் என்ற கேள்வி எழுகிறது? இன்னும் சொல்லப்போனால், கொள்ளை யடித்த 10 இலட்சத்தில் தற்போது 48,000 மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்கள். களவுபோன 63 பவுன் நகையில் வெறும் 38 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது. ஆக, மிச்சப் பணத்தையெல்லாம் சொகுசாக செலவழிக்கும் வரையில் சிக்காமல் எப்படி தப்பினார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.  மிக முக்கியமாக கொள்ளையடித்த பணத்தில் 4.5 இலட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கியிருப்பதாக சொல் கிறார்கள். ஆட்டோ ஓட்டும் அண்ணன், கல்லூரி பயிலும் தம்பி கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் இந்த பின்னணியில் ஸ்கார்பியோ கார் எப்படி வந்தது என அக்குடும்பத்தாருக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் எப்படி சந்தேகம் எழாமல் போனது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

மாடூலர் கிச்சன் குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்....


ராஜேஸ்வரியின் குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, குறிப்பாக மாவட்ட எஸ்.பி. வருண்குமார் இந்த விசயத்தில் தலையிட்டு தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியதன் காரணமாகத்தின் இக்குற்றவாளிகளும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

7


அடுத்தவிசயம், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட நால்வருமே 20 வயதிற்குட்பட்டவர்கள், அதில் மூவர் கல்லூரி மாணவர்கள் என்பது. சமீப காலமாக, செயின்பறிப்பு, பைக் திருட்டு உள்ளிட்ட கொள்ளை வழக்குகளில் மட்டுமல்ல கொலை வழக்குகளிலும் இளம்வயதினர் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. வெளிமாநில பெண்களை வைத்து திருச்சி உறையூர் பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முகம்மது அசாருதீன் என்பவரின் வயது 27. இதுதவிர, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பணையில் ஈடுபட்டு கைதாகும் மாண வர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். அவ்வளவு ஏன், கோபிசெட்டிபாளையத்தில் ஆடு, கோழி, திருடியதாக கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டார்கள்.


ஆடு, கோழி தொடங்கி, பைக் திருடுவது, செயின் பறிப்பில் ஈடுபடுவது உச்சகட்டமாக கொலை குற்றத்தில் ஈடுபடுவது என எல்லாமே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்கிறார்கள் என்பதாக முடிகிறது. தொட்டியம் சம்பவத்தை பொறுத்தவரையில் குற்றவாளிகள் நால்வருமே ஏழ்மையான குடும்பப்பின்னணி கொண்டவர்கள். அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார்கள் என்பதோடு, கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையானவர்கள் என்கிறார்கள். இப்பகுதியில் கஞ்சா சர்வ சாதாரணமாக புழங்குவதாகவும் சொல்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கை என்ற வார்த்தையோடு கஞ்சா என்ற சொல்லும் இரண்டறக் கலந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

– வே.தினகரன், ஷாகுல், படங்கள் – ஆனந்த்

2 Comments
  1. ம.ரஞ்சித் says

    இளம் தலைமுறையினர் இப்படி தரம்கெட்டு தடம் மாறிகொண்டு இருக்கின்றனர் என்பதை தினம் தினம் பார்க்கும்போதும் படிக்கும்போதும் மிகவும் கவலையாக இருக்கிறது.. இளம் வயதினருக்கு ஏதாவது மாற்றத்தை உருவாக்க உங்களை போன்ற ஆசிரியர்கள் தேவை…

  2. buy viagra online from canada

    தடம் மாறும் டீன்ஏஜ்! – Angusam News – Online News Portal about Tamilnadu

Leave A Reply

Your email address will not be published.