உணவு தேடி வந்த குரங்கு மரணம் ; இறுதிச்சடங்கு செய்த இளைஞர்கள் !

இளைஞர் ஒருவர், கையில் தீ சட்டி எடுத்துச் செல்ல, இறுதி ஊர்வலம், தாரை தப்பட்டையுடன் முழக்கத்துடன் அங்குள்ள அனுமன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உணவு தேடி வந்த குரங்கு உயிரிழப்பு ; இறுதிச்சடங்குடன் நல்லடக்கம் செய்த இளைஞர்கள் ! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை  கூட்ரோடு  பகுதியில் ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு ஒன்று அங்கிருந்து மரத்தில் தாவும் போது மரத்தின் அருகில் சென்ற மின் கம்பியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து குரங்கு உயிரிழந்துள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் உயிரிழந்த குரங்கினை மீட்டு தென்னங்கீற்றில் குரங்கு சடலத்தை வைத்து, பூமாலை சந்தனம் பொட்டு வைத்து ஈமச்சடங்கு செய்தனர் பின்னர். இளைஞர் ஒருவர், கையில் தீ சட்டி எடுத்துச் செல்ல, இறுதி ஊர்வலம், தாரை தப்பட்டையுடன் முழக்கத்துடன் அங்குள்ள அனுமன் கோயில் பின்புறத்தில் நல்லடக்கம் செய்தனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

உணவு தேடிவந்த குரங்கு
உணவு தேடிவந்த குரங்கு

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்று இறந்த குரங்குகளை மீட்டு அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்து வருவதாகவும் , தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டது 75 வது குரங்கு என கூறுகிறார்கள் அந்த இளைஞர்கள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆறறிவு படைத்த மனிதன் இறப்பிற்கு செலவு செய்ய யோசிக்கும் இந்த உலகில் ஐந்தறிவு படைத்த  வாய்யில்லா ஜீவனுக்கு செலவு செய்து நல்லடக்கம் செய்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

– மணிகண்டன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.