துறையூரில் டூவீலர் திருடிய திருடர்கள் மன்னிப்பு கேட்டு வீட்டு சுவற்றில் எழுதிச்சென்ற விநோத சம்பவம் !

0

துறையூரில் வங்கி மேனேஜர் வீட்டில் டூவீலர் திருடிய திருடர்கள் மன்னிப்பு கேட்டு வீட்டு சுவற்றில் எழுதிச்சென்ற விநோத சம்பவம். திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் புறவழிச் சாலை அருகே உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ இவர் துறையூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

வங்கி மேலாளர் வீடு
வங்கி மேலாளர் வீடு

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

செல்வம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.இளங்கோ கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனது சொந்த காரில் அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

கலைந்த பொருட்கள்
கலைந்த பொருட்கள்

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இரண்டு நாட்கள் கழித்துவீடு திரும்பிய இளங்கோ தனது வீட்டின் முன்புறக்கதவு திறந்த நிலையில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு , உள்புறக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டினுள் உள்ள மர பீரோவை உடைத்து திருட முயற்சித்து ஏதும் கிடைக்காததால் , இளங்கோவின் குழந்தைகளுடைய உண்டியலையும்,வீட்டின் போர்டிகோவில் நின்று கொண்டிருந்த டிவிஎஸ் ஜூபிடர் என்ற இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் மர்ம நபர்களுக்கு நகை, பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் உள்புற அறையின் சுவற்றில் , ” சாரி சிஸ்டர் அண்ட் பிரதர்,, மன்னித்து விடுங்கள்” என கிரேயான் பென்சிலைக் கொண்டு எழுதிச் சென்றுள்ளனர். குழந்தைகள் சேமித்த உண்டியலில் ரூ.2 ஆயிரம் வரை இருக்கும் எனவும், இருசக்கர வாகனத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் எனவும் தெரியவருகிறது.

கலைந்த துணிமணிகள்
கலைந்த துணிமணிகள்

இது குறித்து வங்கி மேலாளர் இளங்கோ உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . அதிகமாக நகை, பணம் எதிர்பார்த்து இல்லாததால் இருசக்கர வாகனத்தையும், குழந்தைகளின் உண்டியலையும் திருடிச்சென்ற மர்மநபர்கள் சுவற்றில் மன்னிப்பு கேட்டு எழுதிய விநோத சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பாக பேசும் பொருளாக மாறி உள்ளது.

கதவி உடைப்பு
கதவி உடைப்பு

மேலும் துறையூர் -பெரம்பலூர் புறவழிச்சாலை குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வருவதில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள காலி மனைகளில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் திறந்தவெளி மதுபானக்கூடமாக மாறி கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தும் நிகழ்வும் தினந்தோறும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

-ஜோன்ஸ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.