ரிசர்வேஷன் செஞ்சும் பிரயோஜனமில்லை… மிரட்டப்படும் ரயில் பயணிகள்!

0

தென்னக ரயில்களில் பாதுகாப்பற்ற இரயில் பயணம் – நடவடிக்கை எடுக்குமா இரயில்வே நிர்வாகம் !

இரயில் பயணத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். பயணத்தில் எடுத்துக்கொண்டு போகும் உணவை உண்ணலாம். இரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளை வாங்கிக் கொள்ளலாம். தலை வலித்தால் டீ,காபி. சின்னப்பிள்ளைகளுக்கு சமோசா, பருப்பு வடை, மெதுவடை, ஐஸ்கீரிம் என்று சாப்பிக் கொண்டே மகிழ்ச்சியாகப் பயணம் செய்யலாம். இயற்கை உபாதை என்றால் அதற்கான கழிவறைகள் உள்ளன. குறிப்பாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரயில் பயணம்போல் எதுவும் அமையாது. தற்போதைய சூழலில் பயணிகளின் பெரும்பாலானோர் முன்பதிவு செய்து பயணம் செய்கிறார். முன்பதிவில்லா பெட்டியில் கூட்டம், நெரிசல் அதிகம். அவசர நேரத்தில்தான் மத்திய தர மக்கள் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்கிறார்கள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பல்லவன்
பல்லவன்

திருச்சி, அரியலூர், விருத்தாசலம் இரயில் நிலையங்களில் ஏறி பயணம் செய்யும் முன்பதிவில்லா பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளை மிரட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. பயணச்சீட்டு பரிசோதகர்கள் பெரும்பகுதி வருவதில்லை. வந்தாலும், முன்பதிவில்லா பயணிகளை அறிவுறுத்தி முன்பதிவில்லா பெட்டிக்குச் செல்ல சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் முன்பதிவில்லா பயணிகள் அந்தப் பெட்டியின் கழிவறைகள் உள்ள இருபக்கங்களிலும் நின்றுகொண்டும், கீழே அமர்ந்துகொண்டும் பயணம் செய்கிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முன்பதிவு பெட்டியில் முன்பதிவில்லா பயணிகள் ஏறி பயணம் செய்வது இரயில்வே நிர்வகத்தின் சட்டப்படி தவறு. மேலும், முன்பதிவில்லா பயணிகள் காலியாக உள்ள இடங்களில் பயணம் செய்கிறார்கள். தங்களின் உடமைகளை முன்பதிவு செய்த பயணிகளின் உடமைகளோடு சேர்த்து வைக்கிறார்கள். இடையில் இறங்கும்போது பெட்டிகளை மாற்றி எடுத்து செல்வதும் நடைபெறுகின்றது. இதனை இரயில்வே நிர்வாகம் கண்டும் காணாமலும் உள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி மதிப்பில் மறு சிரமைப்பு பணிகள்
மதுரை ரயில்

பல்லவன், வைகை விரைவு வண்டிகளில் ஒரு பெட்டிக்கு சுமார் 100 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். கோடைகாலம், விழா காலம், முகூர்த்த காலங்களில் கூட்டம் அதிகம் உள்ள நிலையில் முன்பதிவில்லா பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறிக்கொண்டு வன்முறையாக பேசுகின்றனர். சில சமயங்களில் கைகலப்பு, அடிதடியும் நிகழ்கிறது. மகிழ்வைத் தரும் இரயில் பயணம் தற்போது பாதுகாப்பற்ற பயணமாக அமைந்து வருகின்றது. இதனை இரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டு முன்பதிவு பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இரயில் பயணங்கள் எப்படி பாதுகாப்பற்றதாக ஆகிவருகிறது என்பதைச் சில பயணிகள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு மதியம் 3.00 மணிக்கு குருவாயூர் விரைவு வண்டி வருகின்றது. அதில் முன்பதிவு செய்துள்ள திருச்சி பயணி தன் சீட்டிற்குச் சென்றால், அங்கே ஒருவர் அமர்ந்திருக்கிறார். “இது என் சீட்டு, எழுந்திருங்கள்” என்றால், “நானும் டிக்கெட் வாங்கிதான் பயணம் செய்கிறேன்” என்று ஒப்பன் டிக்கெட்டைக் காட்டுகிறார். இது ரிசர்வேஷன் கோச் என்று முன்பதிவு டிக்கெட் காட்டினால், “ நா திருநவேலியிலிருந்து வரேன். யாரும் என்ன எழுந்திருக்கச் சொல்லல…. இப்ப நான் எழுந்திருக்க முடியாது. டிடியர் வரட்டும் பேசிக்கொள்ளலாம்” என்று அழுத்தமாக அமர்ந்திருக்கிறார்கள்.

வைகை ரயில்
வைகை ரயில்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பயணச்சீட்டு பரிசோதகர் எங்கே இருக்கிறார் என்று தேடிப்பார்த்தால் பரிசோதகர்கள் இருப்பதில்லை. முன்பதிவு பயணி தன் உரிமையைக் கோரினால் மற்ற முன்பதிவு பயணிகள் ஆதரவு தரமால் கண்டும் காணாமலும் உள்ளனர். சென்னை வரை நின்றுகொண்டே போக வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. 100பேர் பயணம் செய்யவேண்டிய அமர்ந்து செல்லும் இரயில் பெட்டியில் 200 பேருக்கு மேல் பயணம் செய்கிறார்கள். இதனால் இயற்கை உபாதையைக் கழிக்க இடித்துக்கொண்டும் தாண்டிக்கொண்டும் செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சமயத்தில் கழிவறையில் தண்ணீர் தீர்ந்துபோகிற அவலமும் நிகழ்கிறது.

இதில் தான் இவ்வளவு பிரச்சனை என்று சீலிப்பர் கோச்சில் ரூ.400க்கு முன்பதிவு செய்தும் ரூ.600/-க்கு தக்கல் மூலம் பயணச் சீட்டு பெற்றுச் சென்றால் அங்கேயும் இந்த முன்பதிவில்லா பயணிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை. திருச்சியிலிருந்து இரயில் நகரத் தொடங்கி வேகம் பிடிக்கத் தொடங்கியவுடன், முன்பதிவு இல்லாத ஓப்பன் டிக்கெட் எடுத்த பலர் சீலிப்பர் கோச்சிற்குப் படையெடுத்து வருகிறார்.

வருபவர்கள் Side Lower சீட்டில் பகல் நேரம் என்பதால் அமர்ந்திருந்தால் அவரோடு சேர்ந்து அமர்ந்து கொள்கிறார்கள். படுத்திருந்திருந்தாலும் கால்மாட்டிலும் தலைமாட்டிலும் இருவர் அமர்ந்துகொள்கிறார்கள். Side Upperஇல் முன்பதிவு அமர்ந்திருந்தால் அவரிடம் கேட்டுக்கொண்டு இருவர் அமர்ந்துகொள்கிறார்கள். பகல் நேரம் என்பதால் சீலிப்பர் கோச்சில் பயணம் செய்பவர்கள் அமர்ந்தே பயணம் செய்கிறார்கள்.

Railway
Railway

இந்த நிலையில் Upper Berth காலியாகத்தான் இருக்கும். Upper Berth பயணியிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு, நீங்கள் படுக்க வரும்வரை அமர்ந்துகொள்கிறோம் என்று இருவர் ஏறி அமர்ந்துகொள்வார்கள். பயணி மறுத்து நான் படுத்துக்கொள்கிறேன் என்று மேலே ஏறி படுத்துக்கொண்டால், அவரின் காலியான இடத்தில் இருவர் நெருக்கி அமர்ந்துகொள்வார்கள். இப்படி நெருக்குகின்றீர்களே என்று பயணிகள் வாயைத் திறந்தால் முன்பதிவில்லா பயணிகள் வன்முறையாகப் பேசத்தொடங்குவார்கள். “ரிசர்வேஷன் பண்ணிட்ட இரயிலே உங்களுக்குச் சொந்தமா….. நாங்களும் டிக்கெட்டு எடுத்துதான் வரோம் (ரூ.150 டிக்கெட்) கூட்டமா இருக்கிறது கொஞ்சம் அஜட்ஸ் செய்துகொள்ளுங்க….. எங்களுக்கிட்ட ரூரல் பேசாதிங்க…. எங்களுக்கு ரூரல் தெரியும். ரூரலை டிடியர் சொல்லட்டும்” என்று முன்பதிவு பயணிகளின் வாயை அடைத்துவிடுகின்றார்.

பல்லவன், வைகை விரைவு வண்டிகளில் அரியலூர், விருத்தாசலம் இரயில் நிலையங்களில் ஏறும் முன்பதிவில்லா பயணிகளின் முன்பதிவு பெட்டிகளில்தான் ஏறி பயணம் செய்கிறார். யார் கேட்டாலும் முன்பதிவில்லா பயணிகள் கூட்டமாக சேர்ந்துகொண்டு முன்பதிவு பயணிகளை மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். காலியாக உள்ள இடங்களைப் பார்த்து,“இங்கே யார் வராங்க….” “பாத்ரூம் போயிருக்க” என்று பதில் சொன்னவுடன், “வந்தவுடன் எழுந்துகொள்கிறோம் என்று அமர்ந்துகொள்ளும் போக்கு வன்முறையின் உச்சம். அப்படி அமர்ந்திருப்பது பெண் என்றால், பாத்ரூம் சென்றவர் ஆணாக இருந்து சீட்டில் அமரச் சொன்றால், “அய்யா விழுப்புரம் வரை தான் புள்ளக்குட்டிங்களோடு வரோம்…. செத்த நின்னு வாங்கய்யா” என்று மிரட்டல் அற்ற தன்மையோடும் வன்முறை நிகழ்கிறது.

ரயில்வே
ரயில்வே

இந்த இரயில்களில் டிடியர் வந்தாலும் முன்பதிவில்லா பயணிகளை அப்புறப்படுத்தி முன்பதிவில்லா பெட்டிக்குச் செல்ல அறிவுறுத்துவது கிடையாது. அண்மை காலங்களில் டிக்கெட் பரிசோதகர்களை முன்பதிவில்லாது பயணம் செய்யும் பயணிகள் தாக்குவது, அடிப்பது, சட்டையைக் கிழிப்பது போன்ற வன்முறை செயல்கள் அரங்கேறி வருகின்றது. “முன்பெல்லாம் இரயில் பயணங்களில் தமிழ்நாடு காவல்துறையும், இரயில்வே காவல்துறையும் ரோந்து வந்து, வன்முறையில் ஈடுபடும் முன்பதிவில்லா பயணிகளைக் கைது செய்து, இரயில் நிலையங்களில் இறக்கிவிடுவார்கள். டிடியர் அபராதத் தொகை போடுவார்கள். இப்போது எதுவும் இல்லை. முன்பதிவு செய்து பயணம் செய்வோர் பாதுகாப்பை இரயில்வே நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்” என்ற பயணிகளின் குரலுக்குத் தென்னிந்த இரயில்வே நிர்வாகம் செவிசாய்க்குமா?

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.