திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என்.சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி !
திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என். சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி !
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நினைவேந்தல் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ரெங்கராஜன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். மாவட்டத் தலைவர் சிவ. வெங்கடேஷ் வரவேற்றார்.
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி செயலர் அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ நினைவேந்தல் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மாதர் சங்கம் லிங்கேஷ்வரி, ராஜமகேந்திரன், சிராஜுதீன், செந்தமிழ்ச் செல்வன், மோகன், மாவட்டப் பொருளாளர் ஹரிபாஸ்கர், வழக்குரைஞர் பழனிவேல் நினைவேந்தல் உரையாற்றினர்.
நந்தலாலா தனது புகழஞ்சலி உரையில் சங்கரய்யா உடனான தனது நினைவுகளைக் குறிப்பிட்டு தனது வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத இந்நூற்றாண்டின் ஈடில்லா மாசில்லா சிறந்த கம்யூனிஸ்ட் டாக வாழ்ந்த எளிய மக்களின் வலிமையானக் குரல் தோழர் சங்கரய்யா என்றார். சீத்தா வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்வில் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.