முத்தரையர்களை ஒதுக்கும் பாஜக – சமூக வலைதளங்களில் சர்ச்சை !

0

தமிழக பாஜக முத்தரையர் சமூகத்தை ஒதுக்குவதாக முத்தரையர் சமூகத்தினுடைய பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர். முத்தரையர் சங்கம் அதிகம் வசிக்கக்கூடிய திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களுடைய அதிருப்தியை பாஜக தலைமைக்கு தெரியப் படுத்தி இருக்கின்றனர். மேலும் பல முத்தரையர் அமைப்புகளும், இயக்கங்களும் சமூக வலைதளங்களில் பாஜகவில் முத்தரையர்கள் ஓரம் கட்டுப்படுவதாக குற்றம் சாட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து அறிய திருச்சி பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்புக் கொண்டோம்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

பாஜக நிர்வாகியின் கருத்து, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் ராஜேஷ்குமார் இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தரையர் சமுகம் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக இருக்கக் கூடிய திருச்சியில் மட்டும் பாஜகவின் மாவட்ட தலைவராக முத்தரையர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவசரஅவசரமாக மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு மாவட்ட தலைவர் பதவியை மாநில தலைமை வழங்கியிருக்கிறது.
இது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் முக்கிய சமூகங்களில் ஒன்றாகவும், 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மை உள்ள முத்தரையர் சமுகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் முத்தரையர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் திருச்சியில் மட்டும் தான் பாஜகவின் மாவட்டத் தலைவர் பதவியில் ஒரு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பதவி காலம் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டிய மாவட்ட தலைவரை, ஒன்றரை ஆண்டு முடிந்தவுடனே அவசர அவசரமாக மாற்றியிருப்பது முத்திரையை சமூகத்தை புறக்கணிக்கும் நிலை என்று கூறினார்.
மேலும் முத்தரையர் சமூகத்தை ஒதுக்கக் கூடிய பாஜகவின் இந்த செயலால் முத்தரையர் சமூக இளைஞர்கள், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் இதனால் பலர் கட்சி மாறுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் மேலும் சிலர் பாஜகவில் இருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாகவும் கூறினார்.

- Advertisement -

 

4 bismi svs

இப்படியான செயல்களுக்கு காரணம் தமிழக பாஜகவின் மறைமுக தலைமை, தலைமை இருக்க, மறைமுகமாக ஒரு தலைமை செயல்பட்டு வருகிறது.இந்த தலைமை தான் தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. இந்த மறைமுக பாஜக தலைமையினுடைய செயல்பாடுகளால் தான் குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கக் கூடிய நிலையும் குறிப்பிட்ட சமூகத்தை ஆதரிக்கக் கூடிய நிலையும் நிலவுகிறது. இது பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது என்று கூறினார்.

இதுகுறித்து முத்தரையர் சங்க தலைவர் ஆர்.வியின் மகன் கோவி ராம் பிரபு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கக்கூடிய பதிவு, அதிமுக , திமுகவை போலவே முத்தரையர்களை வஞ்சிக்கும் பாஜக !

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் பட்டியலில் முத்தரையர்கள் பிரதிநிதித்துவம் எங்கே ?

எம் சமுதாய இரத்த சொந்தங்கள் அதிகம் பா.ஜ.க வில் பயணித்து வருகின்றனர் . இருப்பினும் எங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை …

தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாயம் எங்கள் முத்தரையர் சமுதாயம் . கிட்ட தட்ட 50 சட்ட மன்ற தொகுதியில் தனிப்பெரும்பான்மை .. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்கின்ற ஒரே சமுதாயம் .. பா.ஜ.க அரசே முத்தரையர்களை வஞ்சிக்காதே ….

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.