திருச்சி மாநகர காவல் எல்லைக்கு 2 துணை கமிஷனர்கள் – உதவி கமிஷனர்களின் எல்லைகளும் மாற்றம்!

0

திருச்சி மாநகர காவல் எல்லைகள் வடக்கு, தெற்கு என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளுக்கும் இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் உதவி கமிஷனர் எல்லைகளையும் பிரித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

அதோடு திருச்சி மாநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர்களே குற்றபிரிவையும் சேர்த்து கவனிப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இதன்படி திருச்சி மாநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக சக்திவேலும், தெற்கு பிரிவு துணை ஆணையராக முத்தரசு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் வடக்கு பிரிவின் கீழ் செயல்படும் உதவி கமிஷனராக ராஜு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் கட்டுப்பாட்டின் கீழ் தில்லை நகர், உறையூர்,அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைகள் வருகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காந்தி மார்க்கெட் சரக உதவி கமிஷனராக சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை மகளிர் காவல் நிலையம், வடக்கு போக்குவரத்து பிரிவு எல்லைகள் வருகின்றன.
ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீரங்கம், கோட்டை காவல் நிலையம், ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையம் ஆகியவை வருகின்றன.
வடக்கு போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக ஜோசப் நிக்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அது கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீரங்கம், கோட்டை, உறையூர், பாலக்கரை ஆகிய போக்குவரத்து பிரிவு காவல் நிலையங்கள் இடம்பெறுகின்றன. மற்றும் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சின்னசாமி, மாநகர குற்றப்பதிவேடு பிரிவு உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் வடக்கு துணை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மாநகர தெற்கு பிரிவு துணை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் கேகே நகர் உதவி கமிஷனர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது கட்டுப்பாட்டில் கேகே நகர் காவல் நிலையம், ஏர்போட் காவல் நிலையம், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் ஆகியவை இடம்பெறுகின்றன.
கண்டோன்மெண்ட் சரக உதவி கமிஷனராக அஜித் தங்கமே நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் கண்டோன்மென்ட், கோர்ட், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம், கண்டோன்மண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, மாநகர ரோந்து பிரிவு ஆகியவை இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
பொன்மலை உதவி சரக ஆணையராக காமராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் பொன்மலை, அரியமங்கலம், பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தெற்கு போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கண்டோன்மென்ட் மற்றும் அரியமங்கலம் போக்குவரத்து பிரிவுகள் இடம்பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும் ஆயுதப்படை உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் காமராஜ், மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனர் ராஜசேகர், வெடிகுண்டு கண்டறியும் பிரிவு உதவி கமிஷனர் செந்தில்குமார், மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை உதவி கமிஷனர் ஆகியோர் தெற்கு பிரிவின் துணை கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.