திருச்சி லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ”உயிர் காக்கும் தலைக்கவசம்” மற்றும் ”பிளாஸ்டிக் தவிர்போம்” விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டத்திலுள்ள லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மற்றும் தண்ணீர் அமைப்பு இணைந்து ”பிளாஸ்டிக் தவிர்போம்” விழிப்புணர்வு நிகிழ்வும் திருச்சி அண்ணா ஸ்டேடித்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆளுநர் லயன் ஏ.சவரிராஜ், லயன் மணிவண்ணன், லயன் விஜயலட்சுமி சண்முகவேல் ஆகியோரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் எம்.நடராஜன் வரவேற்றார்.
இந்நிகழ்வினை தொடா்ந்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் விலையில்லா 1001 தலைக்கவசம் வழங்கியும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் எம்.ஏ.அலீம் சிறப்புயாற்றி விழிப்புணர்வு பேரணி திருச்சி காவல் ஆணையர் என்.காமினி அவா்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் “பிளாஸ்டிக் தவிர்போம், துணிப்பை எடுப்போம்” என விழிப்புணர்வு நிகழ்வும், திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி கே. கண்ணன் அவா்களால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணி வேண்டி பேரணியும் நடைப்பெற்றது.
— அங்குசம் செய்திப்பிரிவு.