திமுக கொடுங்கோலாட்சிக்கு சாவுமணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது : டிடிவி தினகரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக கொடுங்கோலாட்சிக்கு
சாவுமணி அடிக்கும் காலம்
நெருங்கி விட்டது : டிடிவி தினகரன்

திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு சாவுமணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் அமமுக சார்பில் திங்கள்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.


அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் எம். ராஜசேகர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ப.ராஜேஸ்வரன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு எதுவெல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என போராட்டம் நடத்தினாரோ, எதுவெல்லாம் வேண்டும் என போராட்டம் நடத்தினாரோ அதையெல்லாம் விட்டுவிட்டு கொடுங்கோல் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வரவேண்டும் என தேன் தடவிய வார்த்தைகளால் பேசிவிட்டு, தற்போது திராவகத்தை ஊற்றி தமிழக மக்களை ஸ்டாலின் நோகடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆட்சிக்கு சாவுமணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது.


ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது நிச்சயம் திமுக எனும் தீயசக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும். ஒருசில சுயநலவாதிகளை அப்புறப்படுத்திவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர நாம் தயாராக இருக்கிறோம் என்றார் டிடிவி தினகரன்.

ஓரத்தநாடு எம்எல்ஏ-வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆர். வைத்திலிங்கம் பேசுகையில்,

சுயநலக்காரரான எடப்பாடி பழனிசாமியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது.


திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 524 தேர்தல் அறிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட திமுக ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் சொன்னதை நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சியில் மின்சாரவெட்டு, கள்ளச்சாராயம் என இப்படி நாடு சீரழிந்துக்கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000, லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் தற்போது கிடையாது.

‘ஸ்டாலின் வருகிறார்…விடியல் தரப்போகிறார்’ எனச் சொன்னார்கள். ஆனால் ‘விடியா அரசாக’ திமுக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றார் வைத்திலிங்கம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.