திருச்சியில் சிறுவர்களை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
திருச்சியில் சிறுவர்களை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் யமஹா ஷோரூம் அருகே இரவு 10 மணி அளவில் கடையினை பூட்டிவிட்டு தனது உறவினர் முன்னே செல்ல பின்னே தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பதினேழு வயது மதிக்கதக்க சிறுவனிடம் வி.என் நகரில் இருந்து ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சிறுவனை திட்டி அவனது கவனத்தை திசை திருப்பி வாகனத்தை நிறுத்துமாறு வற்புறுத்தி உள்ளது.
சிறுவன் வாகனத்தை நிறுத்தவே அந்த வழிப்பறி கும்பலை சேர்ந்த இரண்டு பேரில் ஒருவர் மட்டும் சிறுவனின் வாகனத்தில் ஏறிக் கொண்டு பட்டாக் கத்தியை வைத்து வயிற்றைக் கிழித்து விடுவேன் என்றும், நான் சொல்லும் இடத்திற்கு செல்லுமாறும் மிரட்டியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளான். சரியாக கரூர் பைபாஸ் சாலை சென்றவுடன் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இருட்டில் வண்டியை நிறுத்தி சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர் வாகனத்தை கேட்டு மிரட்டவே வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு சிறுவன் ஓடியுள்ளார்.
சிறிது தூரம் பின்தொடர்ந்த அந்த வழிப்பறி கும்பல் சிறுவன் யாரையாவது கூப்பிட்டு விடுவான் என்ற பயத்தில் வாகனத்தை விட்டுட்டு ஓடியது இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் போலீசார் இது தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது முகத்தில் எந்தவித மறைத்தலும் இல்லாமல் அந்த இரண்டு பேர் சிறுவனை கத்தியை காட்டி மிரட்டியது தெரியவந்தது. அதனடிப்படையில் நேற்று 6/1/2021 சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர் கைது செய்ததில் குழுமணி ரோடு உறையூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக்(20), மற்றும் உறையூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(20) ஆகியோர் சிறுவர்களை குறிவைத்து சமீபகாலமாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஜித்தன்