பல்கலைக்கழக மானியக்குழு – உயர்கல்வித்துறையில் மாற்றங்கள் அறிவிப்பு “ குழப்பத்தையே ஏற்படுத்தும்” கல்வியாளர் முனைவர் பெ.ஜெயகாந்தி கருத்து

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை அனுமதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். இந்த மாற்றம், மாணவர்களின் காத்திருப்பு காலத்தை குறைத்து, அதிக நெகிழ்வுத்தன்மையுடன் உலகளாவிய கல்வி நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், “12ஆம் வகுப்பில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும், மாணவர்கள் விரும்பிய இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இதற்காக, தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்த அறிவிப்புகள் குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மேனாள் தலைவரும், அகில இந்திய பல்கலைக்கழக / கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெக்டோவின் தேசிய செயலர் பொறுப்பில் இருந்தவரும், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்களிடம் பல்கலைக்கழக மானியக் குழுவின் அண்மைக் கால அறிவிப்புகள் உயர்கல்வித்துறையை மேம்பட வைக்குமா? என்று அங்குசம் செய்தி இதழ் சார்பில் கேள்வியை முன்வைத்தோம். பதில் அளித்த முனைவர் பெ.ஜெயகாந்தி (70),

“இந்தியக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு அடிக்கடி சில அறிவிப்புகளை வெளியிட்டு வரும் என்பது வாடிக்கையான ஒன்றுதான். என்றாலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளில் இரண்டு செய்திகள் மிகமுக்கியமானவை.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

  1. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை என்று அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை – ஆகஸ்ட் மற்றும் ஜனவரி – பிப்ரவரியில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று அறிவித்துள்ளது. இதை மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது மாணவர் நலன் சார்ந்தாக இருப்பதுபோல் தோன்றும். அது உண்மை அல்ல. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளிவந்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் ஜூலை மாதத்தில் சேர்ந்துகொள்ளவார்கள் அதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. +2 தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மறுதேர்வு நடைபெறும்.
  2. இதில் குறைந்த அளவு மாணவர்கள் பங்கேற்று, குறைந்த விழுக்காடு மாணவர்கள்தான் தேர்ச்சிப் பெறுவார்கள். ஜூலை மாதம் சுமார் 4 இலட்சம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவங்களில் இணைக்கிறார்கள் என்றால், மறுத்தேர்வில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள். இவர்கள் ஜனவரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் சேர்ந்த மாணவர்களோடு இணைத்து இவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கமுடியாது. இவர்களுக்கென்று தனியான வகுப்பறை, ஆய்வங்கள், ஆசிரியர் எண்ணிக்கை கூட்டுதல் என எல்லா பாடங்களுக்கும் அமைக்கப்படவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இன்னொரு கல்லூரி இணையாக செயல்படவேண்டும்.

இந்த உள்கட்டமைப்பு வசதியை மாநில அரசு செய்துகொள்ளவேண்டுமா? ஒன்றிய அரசின் கல்வித்துறை செய்து கொடுக்குமா? பல்கலைக்கழக மானியக் குழு இதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யுமா? என்ற சாமானியர்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லை. கல்வியில் மாற்றம், சீர்திருத்தம் என்று அறிவித்தால் போதுமா? மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடைமுறைக்குவர ஆகும் நிதி செலவினம் குறித்து எந்த செய்தியும் இல்லை என்பது என்போன்ற கல்வியாளர்களுக்குப் பெரும் வருத்தத்தை அளிக்கின்றது.

அடுத்து, +2 படிப்பில் எந்தப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் உயர்கல்வியின் இளநிலை (UG) பட்டப்படிப்பில் எந்தப் பாடத்தையும் படிக்கலாம் என்பதைக் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வருகிறோம், சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தற்போதைய +2 வகுப்பில் 3 குரூப் உள்ளன. முதல் குரூப் படிப்பவர்கள் பொறியியில் படிப்பிற்கும், கலை, அறிவியல் வகுப்பில் சேரலாம். 2ஆம் குரூப் படிப்பவர்கள் மருத்துவம் அல்லது கலை, அறிவியல் வகுப்பில் சேரலாம். 3ஆம் குரூப் படிப்பவர்கள் வணிகவியல் பாடங்களிலும், கலைப் பாடங்களிலும் சேரலாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இவர்கள் அறிவியல் வகுப்பில் இணையமுடியாது. அதைப்போலவே கணினி அறிவியல் படித்தவர்கள் அறிவியல் பாடங்களிலும், கலைப்பாடங்களிலும் சேரலாம். யூஜிசியின் தற்போதைய அறிவிப்பின்படி +2இல் கணிதம், அறிவியல் படிக்காத ஒருவர் உயர்கல்வியில் கணித வகுப்பிலும் அறிவியல் வகுப்பிலும் சேரலாம் என்பது எப்படி கல்வியின் தரத்தை உயர்த்தும். அடிப்படை பாட அறிவு இல்லாமல் யார்வேண்டுமானாலும் கலைத்துறைப் பாடங்களைப் படித்துக்கொள்ளலாம்.

அறிவியல்/கணினி அறிவியல் இளநிலையில் படிக்க அடிப்படை பாடஅறிவில்லாமல் படிக்கமுடியாது என்பது பாமரர்களும் அறிந்திருக்கும் நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு எப்படி இப்படியொரு அறிவிப்பை ஏன் வெளியிட்டது என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த அறிவிப்பு முதுநிலைப் படிப்புகளுக்கும் பொருந்தும் என்பது வியப்பாக உள்ளது. இளநிலையில் வணிகவியல் / வரலாறு / பொருளாதாரம் படித்த ஒருவர் முதுநிலையில் இயல்பியல்/ வேதியியல்/ தாவரவியல்/ விலங்கியல்/கணினி அறிவியல் படிக்க வாய்புள்ளது என்பதை ஒரு கல்வியாளர் என்ற நிலையில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தொடர்ந்து, மாணவர்கள் ஒரே நேரத்தில் இளநிலை இரு பட்டப்படிப்பையும், முதுநிலையில் இரு பட்டப்படிப்புகளையும் படிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மாலை நேர வகுப்பு அல்லது அஞ்சல் வழியில் படித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரு இளநிலை, ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரே நேரத்தில் 2 பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களின் 2ஆம் பட்டப்படிப்புக்குக் கல்வித்தொகை வழங்க சட்டத்தில் இடம் இல்லை. ஒரே நேரத்தில் இருபட்டப்படிப்பு படிக்கும்போது மாணவர்கள் படிப்புக்கு எப்படி நேரம் ஒதுக்கமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது. சமூகத்தில் முதல்நிலை பட்டதாரியாக இல்லாத தாழ்த்தப்பட்ட/மலைவாழ் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சமூக சூழ்நிலையே நிலவி வருகின்றது. கல்வி எல்லாருக்கும் பொது என்ற நிலையிலிருந்து உயர்வர்க்கத்தினருக்கு மடைமாற்றம் செய்யப்படுகின்றதோ என்ற அச்சம் எழுகின்றது.

இந்த மாற்றங்கள் முழுமையும் புதிய தேசியக் கல்வி கொள்கை அடியொற்றியே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. புதிய தேசியக் கல்விக் கொள்கையை இதுவரை தமிழ்நாடு ஏற்க மறுத்து, “மாநில கல்விக் கொள்கை”யை உருவாக்கியுள்ள இந்த நேரத்தில் தற்போது பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் குழப்பதையே ஏற்படுத்தும் என்தே உண்மையாகும்” என்று கருத்தை நிறைவு செய்தார்.

இதில் ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், பல்கலைக்கழக மானியக்குழுவின் எந்த அறிவிப்பை வெளியிட்டால், அதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை (G.O.) வெளியிட்டால்தான் யூஜிசியின் அறிவிப்புகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வரும். தமிழ்நாடு அரசு யூஜிசியின் அறிவிப்பை ஏற்க மறுத்து, மாநில கல்விக்கொள்கையின்படி புதிய அறிவிப்பை வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்குப் பொறுத்திருப்போம்.

 

 —   ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.