மத்திய மண்டல காவல்துறை சார்பில் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 ஆம் வருடம் மத்திய மண்டலம் காவல் மாவட்டங்களில் 2558 கிலோ கஞ்சாவும், 23,650 கிலோ குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தும், 6042 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகிணங்க போதை இல்லா மாவட்டத்தை உருவாக்கும் முயற்சியாகவும், போதை பழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வண்ணமும், பொது இடங்களிலும், கல்லூரி மற்றும் பள்ளிகளில் கஞ்சா மற்றும் புகையிலை, குட்கா போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மத்திய மண்டல காவல்துறை சார்பில் 2023 ஆண்டை (13,622) விட 2 மடங்கு கூடுதலாக, 2024 ஆம் ஆண்டில் 27,315 ‘போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்” நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினருடன் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

மத்திய மண்டல மாவட்டங்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் மீது 2023 ஆம் ஆண்டில்861 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1236 நபர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் 2024 ஆம் ஆண்டில் மத்திய மண்டல காவல் மாவட்டங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீரிய பணியால் மத்திய மண்டலத்தில் மொத்தம் 1207 வழக்குகள் (திருச்சி-103, புதுக்கோட்டை-122, கரூர்-142, பெரம்பலூர்-68, அரியலூர்-38, தஞ்சாவூர்-235, திருவாரூர்-204, நாகப்பட்டினம்-56 மற்றும் மயிலாடுதுறை-239) பதிவு செய்யப்பட்டு,மொத்தம் 1662 நபர்கள் கைது செய்யப்பட்டு (திருச்சி-181, புதுக்கோட்டை-201, கரூர்-191, பெரம்பலூர்-101, அரியலூர்-44, தஞ்சாவூர்-357, திருவாரூர்-253, நாகப்பட்டினம்-87 மற்றும் மயிலாடுதுறை-247) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் அவர்களிடமிருந்து 2558 கிலோ அளவில் கஞ்சா (திருச்சி-78, புதுக்கோட்டை-459, கரூர்-30, பெரம்பலூர்-146, அரியலூர்-7, தஞ்சாவூர்-1024, திருவாரூர்-65, நாகப்பட்டினம்-717 மற்றும் மயிலாடுதுறை-32) மற்றும் போதை பொருட்களான Tapendadtol Tablets,
Diazepam Powder & Injections  ஆகியவைகள் 5 கிலோ அளவில் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற ஆணையின்படி அழிக்கப்படவுள்ளது. மேலும் எதிரிகளிடமிருந்து 139 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து கஞ்சா,  தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்த 57 நபர்களை (திருச்சி-5, புதுக்கோட்டை-1, கரூர்-1, பெரம்பலூர்-14, அரியலூர்-2, தஞ்சாவூர்-17, திருவாரூர்-12, நாகப்பட்டினம்-2 மற்றும் மயிலாடுதுறை-3) குண்டர் தடுப்பு சட்டத்த்ில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் மீது; 2024 ஆம் ஆண்டில்; 4226 வழக்குகள் (திருச்சி-391, புதுக்கோட்டை-524, கரூர்-392, பெரம்பலூர்-314, அரியலூர்-335, தஞ்சாவூர்-891, திருவாரூர்-835, நாகப்பட்டினம்-170 மற்றும் மயிலாடுதுறை-374) பதிவு செய்யப்பட்டு,4380 நபர்கள் கைது செய்யப்பட்டு (திருச்சி-442, புதுக்கோட்டை-546, கரூர்-411, பெரம்பலூர்-316, அரியலூர்-342, தஞ்சாவூர்-919, திருவாரூர்-848, நாகப்பட்டினம்-177 மற்றும் மயிலாடுதுறை-379) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 23,650 கிலோ அளவில் குட்கா பொருட்கள் (திருச்சி-2062, புதுக்கோட்டை-3281, கரூர்-1957, பெரம்பலூர்-824, அரியலூர்-2738, தஞ்சாவூர்-8152, திருவாரூர்-1541, நாகப்பட்டினம்-2241 மற்றும் மயிலாடுதுறை-850) கைப்பற்றப்பட்டு நீதிமன்ற ஆணையின்படி அழிக்கப்படவுள்ளது.  மேலும் எதிரிகளிடமிருந்து 151 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பேணிகாக்கவும்,கஞ்சா போதை பொருட்கள், குட்கா பொருட்கள், விற்பனைமற்றும் கடத்தல் போன்றவைகளை முற்றிலுமாக ஒழிக்க வரும் காலங்களிலும் தக்க நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.