ஆந்திரா தேர்தலில் 175 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி !

0

 

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி – திருமா அறிவிப்பு

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநிலப் பிரிவின் பொதுக்குழுக் கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 2022 நவம்பர் 16 அன்று நடைபெற்றது.

“ஆந்திர மாநிலத்தில் தலைவிரித்தாடும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களை ஒருங்கிணைக்கப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களின் துயரங்கள் போக்கப்பட வேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டும்” என்று தீர்மானத்தைத் தொல்.திருமாவளவன் முன்மொழிந்தார்.

- Advertisement -

பொதுக்குழு தொல்.திருமாவளவனின் முன்மொழிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர்கள் வழிமொழிந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4 bismi svs

தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் பாஜகவோடு இணைக்கமாகவே உள்ளது.

ஆந்திராவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
ஆந்திராவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

இரண்டு கட்சிகளும் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் நோக்கம் கொண்டவை. சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள தெலுங்குதேசம் காங்கிரஸ் கட்சியோடு இணக்கமாக இருந்து ஆட்சியில் பங்கு கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றது.

இந்நிலையில் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் போட்டியிடுவது என்பது யாருக்குச் சாதகமாக அமையும் என்ற கேள்வி அரசியல் அரசியல் எழுந்துள்ளது.

ஒருவேளை தனித்துப் போட்டியிட்டு ஆந்திர மாநிலத்தை விடுதலைச் சிறுத்தைகள் கைப்பற்றுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.