குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை தெரிவிக்கும் பக்தர்கள்.. கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை..?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை தெரிவிக்கும் பக்தர்கள்.. கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை..?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள்மலை பகுதியில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் தொடங்கி, சமூக விரோதிகளின் அடாவடி நடவடிக்கைகளால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தின், “தென்திருப்பதி ” என பக்தர்களால் அழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மலைக்கோவிலில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்து செல்வர். பெருமாள் மலைமேல் உள்ள கோவிலுக்கு படிகள் மூலமாகவும் , தார்ச்சாலை மூலமாகவும் கார் மற்றும் இரு சக்கர வாகனம் மூலம் சென்று பெருமாளைப் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.பவுர்ணமியன்று கிரிவல நிகழ்ச்சியும் நடைபெறும்.

பெருமாள்மலை
பெருமாள்மலை
3

வருடந்தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து செல்வர். புகழ்பெற்ற பெருமாள்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதைகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி ,மது அருந்துவது, பாலியல் குற்றங்கள் , வழிப்பறி, இரு சக்கர வாகனங்களைத் திருடுதல் ஆகிய சம்பவங்கள் அப்பகுதியில் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில காதல்ஜோடிகள் , பெருமாள் மலைமேல் சாமி கும்பிட செல்வதாகக் கூறி தனித்தனியாக மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளில் உள்ள செடி மற்றும் புதர்களை புகழிடமாக பயன்படுத்தி அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

4
பெருமாள்மலை
பெருமாள்மலை

மலைக்கோவிலுக்கு செல்லும் முதல் சுற்றில் உள்ள ஒரு பகுதியில் மூங்கில் தடுப்புகள் வைத்து , உரச்சாக்குகளை பயன்படுத்தி கூடாரமாக அமைத்துள்ளனர். அந்தக் கூடாரத்தில் பாய் சகிதம் குற்றச் செயல்கள் நடக்கும் விதமாக அப்பகுதியை அமைத்துள்ளனர் .அதன் அருகிலேயே கத்தி , இரும்பு போன்ற ஆயுதங்களும் வைத்துள்ளனர். அவ்வழியாக செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வுடனே சென்று வர வேண்டிய நிலை.

பெருமாள்மலை
பெருமாள்மலை

மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியின் 2-வது சுற்றில் மண்டபம் ஒன்று உள்ளது. படிக்கட்டுகளில் நடந்து வரும் பக்தர்கள் சற்று இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் தினந்தோறும் நடைபெறுவது வழக்கமான செயல்தான் எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பக்தர்கள் பலமுறை புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். விசேஷ நாட்களில் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு மற்ற நாட்களில் நடக்கும் குற்ற நிகழ்வுகள் பற்றி அறநிலையத் துறை கண்டு கொள்வதே இல்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

 

பெருமாள்மலை
பெருமாள்மலை

படிக்கட்டுப்பாதை மற்றும் வாகனங்கள் சென்று வரக்கூடிய பாதை என இரு வழிகளில் வாகனங்கள் செல்லும் இடத்தில் மட்டும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செக்போஸ்ட் அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுவதால் அந்த இடத்தில் மட்டும் பணியாளர் இருந்து வருகிறார். படிக்கட்டு பாதையைக் கண்காணிக்க யாரும் இல்லாததால் காதல் ஜோடிகளும், சமூக விரோதிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அத்துமீறல்களிலும் , குற்றச் செயல்களிலும் ஈடுபடுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. பெருமாள்மலை அடிவாரத்தின் முன்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படும் சூழ்நிலையும் உள்ளது.

பெருமாள்மலை
பெருமாள்மலை

மேலும் தங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவங்களும் , கிரிவலப் பாதை மற்றும் தேரடி அருகிலும் சமூக விரோதிகள் கும்பலாக மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். குற்றச் செயல்களைத் தடுத்து பிரசித்தி பெற்ற பெருமாள் மலையின் புகழைச் சீர்குலைத்து வரும் காதல் ஜோடிகள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகம் கூடுதலாக பாதுகாவலரை நியமித்தும், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்திடவும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.