1 வார்டை 4 வார்டாக பிரித்த கொடுமை – வேட்பாளர் முதல் வாக்காளர் வரை குழப்பிய மறுசீரமைப்பு

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

1 வார்டை

4 வார்டாக

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பிரித்த கொடுமை –

நீங்கள் வேலை பெறுவது எளிது...

வேட்பாளர் முதல் வாக்காளர் வரை குழப்பிய மறுசீரமைப்பு

 

3

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது, தேர்தலும் முடிந்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வீதி வீதியாக தொடங்கி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே மிகப் பெரிய இன்னலுக்கு உள்ளாக்கினார். இப்படி வேட்பாளர்கள் பலரும் தங்கள் வார்டை சேர்ந்த வாக்காளர்கள் யார் என்று தெரிந்து கொள்ளவே திக்குமுக்காடினர்.

4

பெரிய அரசியல் கட்சிகளுமே சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஓட்டு கேட்க மிகவும் சிரமப்பட்டு விட்டன, எந்த பகுதி எந்த வார்டு என்று தெரியாமல் பக்கத்து வார்டை சேர்ந்த வாக்காளரிடம் ஓட்டு கேட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.
இப்படி தனது வார்டை சேராத நபர்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர் முதல் தாங்கள் எந்த வார்டை சேர்ந்த வாக்காளர்கள் என்று தெரியாமல் திக்குமுக்காடிய பொதுமக்கள் வரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்போடும் சிரிப்போடும் நடந்து முடிந்து இருக்கிறது.

மக்களுக்கும் தங்கள் பகுதி வேட்பாளர்கள் யார் என்று கடைசி வரை தெரிந்து கொள்ள முடியவில்லை. எந்த அடிப்படையில் பிரித்தார்கள் என்று யாருக்கும் கடைசி வரை புரியவில்லை.

இந்த அளவுக்கு இன்னலை ஏற்படுத்திய சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள வார்டுகளின் விபரத்தை பார்ப்போம்.

சங்கிலியாண்டபுரம் பின்புறம் உள்ள ரோடு 34 வது வார்டு.

சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு 35 வது வார்டு.

சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு ரைட் சைட் 49வது வார்டு.

சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெரு, காந்தி தெரு, கலைவாணர் தெரு 50 வது வார்டு என்று ஒருஏரியாவையே 4 கூறாக போட்டதால் வாக்காளர்கள் முதல் வேட்பாளர்கள் வரை குழம்பிப் போய் விட்டனர்.

இப்படி 2019 ஆம் ஆண்டு மறு வரையறை செய்யப்பட்ட திருச்சி மாநகராட்சி வார்டு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.