”என்ன செய்து கிழித்தார் பெரியார்” யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 15

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை நிகழ்வு 01.02.2025ஆம் நாள் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர் மற்றும் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி பணிநிறைவு பெற்ற தமிழ் இணைப்பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், மக்கள் கலை இலக்கிய பாடகர் கோவன், திருச்சி சட்டக் கல்லூரி மாணவி மு.சண்முகவள்ளி, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் சுஜாதா சஞ்சய்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் முக்கிய பதிவுகள் அங்குசம் வாசகர்களுக்காகத் தொகுத்து தரப்பட்டுள்ளன.

 பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்

இனிய ரமலான் வாழ்த்துகள்

என்ன செய்து கிழித்தார் பெரியார் என்றால் யாரும் கிழிக்க முடியாதவைகளை எல்லாம் கிழித்தவர் பெரியார் என்று புலனத்தில் பதிவிட்டிருந்த திருச்சியைச் சார்ந்த கவிஞர் நந்தலாலாவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உண்மைதான். இந்திய விடுதலைக்கு முன்பு 1942இல் தந்தை பெரியார் புரோகிதர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதி நடத்தி வைக்கும் திருமணங்களைத் தமிழர்கள் செய்துகொள்ளக்கூடாது. இந்து சட்டப்படி நடத்திவைக்கும் திருமணங்களை மறுத்து, சுயமரியாதை திருமணங்களை நடத்தவேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அந்தத் திருமண முறை மக்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினர்.

பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்
பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பேரறிஞர் அண்ணா 1967இல் ஆட்சிக்கு வந்து, தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லதக்கது என்று இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றினார். தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமணம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் உள்ளது. இந்திய மாநிலங்களில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்து சட்டப்படியான திருமணத்தைத் தந்தை பெரியார் கிழித்து, பகுத்தறிவு சார்ந்த திருமண முறையை அறிமுகம் செய்தார். இந்தச் சமூகம் எதைஎதையெல்லாம் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் புனிதம் என்று கட்டமைத்ததோ, எல்லாவற்றையும் தந்தை பெரியார் போட்டு உடைத்தார். இராமன் இந்தியாவின் கடவுள் என்றால் இராமன் நாயகனாக உள்ள இராமாயணத்தைக் கொளுத்தினார்.

👇👇👇

பிள்ளையார்தான் முழுமுதற் கடவுள் என்றால் பிள்ளையார் சிலைகளை தமிழ்நாடு முழுவதும் போட்டு உடைத்தார். இந்தத் துணிச்சல் இந்தியத் துணைக்கண்டத்தில் பெரியாரைவிட யாருக்கு இருந்தது. தந்தை பெரியாரின் சமூகநீதி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்கவும், அரசு வேலைவாய்ப்புக்குச் செல்லவும் உறுதுணையாக இருந்தது. பெரியார் என்ன செய்து கிழித்தார் என்பதை ஆண்டுதோறும் நடக்கும் பிராமண சங்க மாநாட்டு உரைகள் நமக்குத் தெளிவுபடுத்தும். ‘பார்ப்பான் என்று எங்களை இழிவாகக் கூறுவதை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும்’ என்று பார்ப்பனர்களை அலற வைத்து கொண்டிருப்பவர் பெரியார்.

மாணவர் மு.சண்முகவள்ளி

தந்தை பெரியார் சாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காக சாதி மறுப்பு திருமணங்களைச் செய்துவைக்கிறார். முதன்முதலில் அருப்புக்கோட்டையில் தந்தை பெரியார் ஒரு தம்பதியினருக்குச் சாதி மறுப்பு திருமணம் செய்துவைக்கிறார். இதன் அடிப்படை என்னவென்றால் பெண் விடுதலையாகும். தனக்கு வரும் துணைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். பெரியார் பெண் விடுதலை, பெண்ணுரிமை என்ற பெயரில் தவறான செய்திகளைப் பெண்களிடம் கட்டமைத்தார் என்ற தவறான செய்தி தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டு வருகின்றது. பெண்கள் கருப்பையை அறுத்தெரியவேண்டும் என்று கூறினார். தாய்மையைப் போற்றும் தமிழகத்தில் தந்தை பெரியார் பெண்களைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்று அக் கருத்தைக் கூறவில்லை.

மாணவர் மு.சண்முகவள்ளி
மாணவர் மு.சண்முகவள்ளி

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

கருப்பை, கற்பு என்ற பெயரால் பெண்கள் இங்கே தொடர்ந்து அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் அடிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்தக் கருத்துகளைப் பெரியார் கூறிவந்தார். தந்தை பெரியார் வளர்ந்த மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று தொடர்ந்து கூறிவருவதும் வடிகட்டி பொய். பெரியார் அப்போது இருந்த சட்டப்படி வாரிசுகள்தான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் 14 வயதிற்குட்பட்டே தத்தெடுத்துக்கொள்ளமுடியும் என்பதன் அடிப்படையில் 30 வயதைத் தாண்டிய திராவிடர் கழகத்தின் முன்னோடி பெண்ணாக இருந்த மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்னை மணியம்மை என்று அழைத்துள்ளார். சாதி, மதம், கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை என்று சமூகம் பகுத்தறிவு சிந்தனைகள் பெற தந்தை பெரியார் கிழித்தவைகள் ஏராளம்… ஏராளம்…

மாணவர் சுஜாதா சஞ்சய்குமார்

தந்தை பெரியார் ஆண் பெண் திருமண நிலையில் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை. இருவரும் சமம் என்று சொல்லி, ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆணை துணை என்று அறிவித்தவர் பெரியார். திருமணங்களைக்கூட பெரியார் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் என்றே கூறினார். பெரியாரின் சிந்தனையை உலகில் யாரும் சொல்லவில்லை என்ற ஒன்றுபோதும் பெரியார் கிழித்தவைகளுக்குச் சான்று. தமிழ்த்தேசியத்தின் வடிவம் என்று போற்றிப் பாராட்டப்படக்கூடிய பாரதிதாசன் தந்தை பெரியாரைப் பற்றி கூறும்போது,‘தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டை சுரைப்பை உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும்… அவர்தாம் பெரியார் என்றார்” பெரியார் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் என்றும் பாரதிதாசனுக்கும் பெரியாருக்கும் பெரிய சண்டை இருந்ததுபோலவும் இங்கே பலரும் கட்டமைக்கிறார்.

மாணவர் சுஜாதா சஞ்சய்குமார்
மாணவர் சுஜாதா சஞ்சய்குமார்

பெரியாரின் சிந்தனைகளைத்தான் பாரதிதாசன் கவிதை வடிவமாக்கி மக்களிடம் கொடுத்தார். இந்த உண்மையை மறைத்து என்ன செய்து கிழித்தார் பெரியார் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் எல்லாரும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கான வழியை அமைத்து தந்தவர் தந்தை பெரியார். தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார் என்று புலம்புகிறார்கள். தமிழ்மொழி அறிவியல் செய்திகளைச் சொல்லும் மொழியாக வளரவேண்டும். புராணக் குப்பைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கக்கூடாது என்றார்.

திருக்குறளுக்கு முதன்முதலில் மாநாடு யார் நடத்தியது பெரியார்தானே. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார். அதனால் இன்று கணினிக்கு ஏற்ற மொழியாக தமிழ்மொழி மாறியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று தனித்தமிழ்நாடு கேட்டு முழங்கியவர் தந்தை பெரியார்… இப்படி பெரியார் கிழித்தவைகளைப் பட்டியலிட்டால் காலம் அதிகமாகும். பெரியார் எதைக் கிழிக்கவில்லை என்று சொல்லுங்கள்.

 பாடகர் கோவன்

கற்பகம் திரைப்படத்தில்,‘மன்னவனே ஆழலாமா… கண்ணீரை விடலாமா” என்று பாடல் தொடங்கும். இறந்துபோன மனைவி ஆவியாக வந்து, கணவனிடம் கண்ணீர் மல்க பாடி, நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவார். அந்தக் கால வழக்கப்படி மனைவி, தன் கணவனை மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூற உரிமை இருந்தது. கணவன் இறந்த நிலையில், மனைவியை மறுமணம் செய்துகொள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லாத நிலையே இருந்தது. கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறிய முதல் மனிதர் தந்தை பெரியார் மட்டுமே. பெரியார் பேச்சோடு நின்றுவிடவில்லை, தன் குடும்பத்தில் தங்கையின் மகளுக்கு மறுமணம் செய்துவைத்தார்.

பாடகர் கோவன்
பாடகர் கோவன்

மனுஷ்மிருதியில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் புத்திரபாக்கியம் பெற்றிட குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களோடு உறவு வைத்துகொள்ளலாம் என்று கூறுகின்றது. பிரம்மன் தன் மகள் சரசுவதியோடு உறவு கொள்கிறார். இதற்குச் சிவனிடம் ஒப்புதலை பிரம்மன் பெற்றுள்ளார் என்று சொல்கிறார்கள். இதைத்தான் பெரியார் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் பெரியாரே இப்படி சொல்லிவிட்டார் என்று உருட்டிக்கொண்டிருக்கிறார்கள். இராமாயணத்தில் சீதைக்கு லவன் என்ற குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை காணாமல் போய்விடுகின்றது. வசிஷ்ட முனிவருக்கு இது தெரிந்து, உடனே தன் தவவலிமையால் குஷன் என்னும் புல்லை எடுத்து அதைக் குழந்தையாக்கி குசன் என்று பெயர் வைத்துவிடுகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்போது காணாமல்போன லவன் வந்துவிடுகிறான். இப்போது சீதைக்கு இருபிள்ளைகள் என்று கதை சொல்லப்படுகின்றது. தந்தை பெரியார் கேட்கிறார், உன் தவவலிமையால் புல்லை எடுத்து குழந்தையாக்க முடிகின்ற வசிஷ்ட்டரால், அந்தத் தவவலிமையால் குழந்தை எங்கே போனது என்று கண்டுபிடிக்க முடியாதா? ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். தந்தை பெரியார் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறார். தொடர்ந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கருத்தை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார். அதுதான் பெரியார். பெரியார் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூகத்தில் திணித்த அத்தனை அழுக்குகளையும் பெரியார் அப்புறப்படுத்தினார். பகுத்தறிவு சிந்தனைகளால் கிழித்து எறிந்தார்.

 

—    ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.