எடுப்பார் கைப்பிள்ளையான துறையூர் சின்னஏரி புதுப்பொலிவு எப்போது?

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அமைச்சர்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது . தற்போது இயற்கையின் கருணையால்தமிழகமெங்கும் மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உள்ள நிலையில் அத்தகைய நீர்நிலைகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் கழிவுநீர் களால் சூழப்பட்டு நீர்நிலைகள் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரியில் உள்ள நீரானது கழிவுநீர்க் கால்வாய்கள் மூலம் மாசு பட்டு எதற்கும் உதவாத நிலையில் உள்ளது.

நகரப் பகுதியான ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சின்ன ஏரியானது பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்புகளின் கீழ் உள்ளது இதன் பாசன பரப்பு 31. 45 ஹெக்டேர் மற்றும் 73.48 ஏக்கர் பரப்பளவு உள்ளதாகும் இந்த ஏரிக்கரையின் நீளம் 990 மீட்டர் ஆகும் இந்த ஏரியில் இரண்டு மதகுகளும்ஒரு கடைக்காலும் அமைந்துள்ளது இந்த சின்ன ஏரியில் இருந்து நீரானது விவசாயத்திற்கும், ஒரு காலத்தில் துறையூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் கலங்கரை விளக்கமாக இருந்து வந்துள்ளது. இப்போது நகரிலுள்ள குப்பைகளான பாலிதீன் பை மருத்துவமனை கழிவுகள் செப்டிக் டேங்க் கழிவு நீர் மற்றும் நகரின் குப்பைகள் அனைத்தும் வாய்க்கால் வழியாக ஏரியினுள் வந்தடைகின்றன.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மேலும் கழிவுகளால் சூழப்பட்டுள்ள சின்ன ஏரியால் துறையூர் நகரம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் கொடிய நோய் பரவ வாய்ப்புள்ளது சின்ன ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி திருச்சிஆத்தூர் பிரதான சாலை செல்வதால் மழைவெள்ள காலத்தில் ஏரியின் நீர் சாலையில் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் சாலையை சேதப்படுத்தி சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

எனவே துறையூர் நகர மக்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை கொடிய நோய் நொடிகளில் இருந்து பாதுகாக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் தூர் எடுத்து ஏரியின் முழு கொள்ளளவை கொண்டு வந்து பாசனத்திற்கும் கால்நடை உபயோகத்திற்கும் மக்கள்பயன்பாட்டிற்கும் ஏதுவாக 990 மீட்டர் நீளமுள்ள சின்ன ஏரியை சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வலுப்படுத்த வேண்டும் எனவும் ஏரியைப் பாதுகாக்க திருச்சி சாலை பகுதியில் பாதுகாப்பு சுவர் கட்டுதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக துறையூர் நகரில் உள்ள சின்ன ஏரியினை , ஏரிகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.680 லட்சம் செலவில் சுத்தம் செய்வதற்கான திட்ட மதிப்பீடு துறையூர் பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளரிடம் இருந்து திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து தமிழக அரசிடம் கடந்த 2017-ம் ஆண்டிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது உள்ள திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துறையூர் சின்ன ஏரி தூர்வாரி புனரமைப்பு செய்யப்பட்டு, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

3


துறையூர் நகரவாசிகளும், சமூக ஆர்வலர்களும் பல முறை ஆட்சியாளர்கள் தேர்தல் நேரங்களிலும், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் சின்ன ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு அடிப்படை பணிகள் நிறைவேற்றுவோம் எனக் கூறுகின்றனர். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் தற்போது வரை எடுக்காமல் உள்ளனர் என ஆதங்கப்பட்டனர். எடுப்பார் கைப்பிள்ளையாக ஏக்கத்தில் தவிக்கும் துறையூர் சின்ன ஏரியை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர் பகுதிக்கு ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் அவர்கள் முதலாவதாக வாக்குறுதி கொடுப்பது சின்ன ஏரியை சீரமைப்பது பற்றி தான்.தற்போது அமைந்துள்ள அரசாவது சின்ன ஏரியின் மீது தங்களின் கவனத்தை திருப்புமா என்ற ஏக்கத்தில் துறையூர் நகரவாசிகளும் , சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். துறையூர் அருகே வாலீஸ்புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

4

துறையூர் நகராட் சியின் 10வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான அம்மன் சிவா

சின்னஏரி குறித்து சமூகஆர்வலரும், துறையூர் நகராட் சியின் 10வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான அம்மன் சிவா கூறுகையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்பாக துறையூரின் குடிநீர் ஆதாரமாகவும் பாசன வசதியாகவும் சின்ன ஏரியின் நீர் பயன்பாட்டில் இருந்தது. இதில் 3 போர்வெல் மோட்டார் மூலமாக நகரவாசிகளுக்கு குடிதண்ணீர் சப்ளை இருந்து வந்தது. நகரின் கழிவு நீர் செல்வதற்கென தனியாக ஓடை இருந்தது.
காலப்போக்கில் குடியிருப்புகள் பெருகியதால், கழிவுநீர்கள் , மழை நீர் ஏரிக்கு வருகின்ற வரத்து வாரி முழுவதும் கழிவுநீர் கால்வாயாக மாறி அதன் மூலம் சின்ன ஏரியில் கலந்து ஏரி நீர் முழுவதும் மாசு ஏற்பட்டுவிட்டது.
அந்தக் கழிவு நீர் போர்வெல் நீர் மூலமாக கலந்து விட்டதால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிட்னி ஃபெயிலியர் மற்றும் உடல் நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடி தண்ணீர் சப்ளையை நிறுத்தி விட்டது என்றார்.

கௌரி என்கிற குடும்பத் தலைவி

கௌரி என்கிற குடும்பத் தலைவி கூறுகையில் ஒரு காலத்தில் சலவைத் தொழிலாளர்கள் வெள்ளாவி வைத்து சலவை செய்தும் மக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்திவந்த சின்ன ஏரியானது, தற்போது அருகில் செல்ல முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் ஏரி முழுவதும் கலந்து முற்றிலும் மாசுபட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்திலுள்ள நகராட்சி கழிப்பிடம் மூலம் வெளியேறும் கழிவுகள் நேரடியாக சின்ன ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொடிய நோய் பரவக்கூடிய அவல நிலையும் உள்ளது. இதனால் சின்ன ஏரி அருகில் உள்ள கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் , காவல் நிலையம், குடியிருப்பு பகுதிகள், ஜவுளிக் கடைகள் ஆகியவற்றில் மாலை நேரங்களிலும் , பகலிலும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதியுறும் சூழல் உள்ளது. கொசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக சின்ன ஏரி மாசுபட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகள் நகராட்சி குப்பைகள் அனைத்தும் ஏரியில் கொட்டப்படுவதால் நீரின் அடியில் ஒன்று சேர்ந்து தார்பாய் போட்டு மூடியதைப் போல் இருப்பதால் நகரில் உள்ள கிணறுகளுக்கு ஏரியின் நீர் செல்ல முடியாத நிலை. மேலும் நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் தங்களின் போர்வெல் கிணற்றிற்கு ஈரப்பதமின்றி நீர் கிடைக்காமல் அவதியுறும் சூழலும் ஏற்பட்டுள்ளது . தற்போது அமையப் பெற்றுள்ள அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துறையூர் வந்தபோது சின்ன ஏரியை தூய்மைப் படுத்தியும் பாதுகாப்பு சுவர் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தும், முன்பு போல் பாசன பயன்பாட்டிற்கு வழிவகை செய்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார். அதனை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றார் .

-ஜோஸ்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.