அங்குசம் பார்வையில் ஒயிட் ரோஸ் !
பெரும்பாலான சீன்கள் இரவு நேரத்தில் நடப்பதால், அதற்கான உழைப்பைச் சரியாக கொடுத்திருக்கார் கேமராமேன் வி.இளையராஜா. க்ரைம் த்ரில்லிங்கிற்கு கியாரண்டி தந்திருக்கிறார் மியூசிக் டைரக்டர் சுதர்ஷன்.
அங்குசம் பார்வையில் ஒயிட் ரோஸ் !
தயாரிப்பு: ‘பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ்’ என்.ரஞ்சனி. டைரக்ஷன்: கே.ராஜசேகர். நடிகர்—நடிகைகள்: கயல் ஆனந்தி, விஜித், ரூசோ ஸ்ரீதரன், ஆர்.கே.சுரேஷ், சசிலயா, பேபி நக்ஷத்ரா, சுழியன் பரணி, ரித்திகா சக்கரவர்த்தி, ஹஷின், தரணி ரெட்டி. பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு: வி.இளையராஜா, இசை: சுதர்ஷன், எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, ஆர்ட் டைரக்டர்: டி.என் கபிலன், சவுண்ட் டிசைன் & மிக்ஸிங்: ஏ.எஸ்.லக்ஷ்மி நாராயணன். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா & ரேகா டி ஒன்.
இரவு நேரம். ஒரு இளம் பெண் காரில் ஏறுகிறார். விடிந்தால், கூவம் நதிக்கரையோரம் கண்டதுண்டமாக வெட்டி வீசப்பட்டிருக்கிறார். ரைட்டு.. இதுவும் ஒரு சைக்கோ கில்லர் படம் தான். வரிசையா பொம்பளப் புள்ளைகளைப் போட்டுத்தள்ளப் போறாய்ங்கன்னு தான் நினைச்சோம்.
ஆனா ஸ்கிரிப்ட் வேற மாதிரி இருக்கு. இஸ்லாமியரைக் (விஜித்) காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதால் பெற்றோரால் வீட்டைவிட்டு விரட்டப்படும் கயல் ஆனந்தி, பெண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறார். காதல் கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சென்னைக்கு வருகிறான். காதல் மனைவியின் பிறந்த நாளை சர்ப்பரைசாக ஹோட்டலில் கொண்டாடிவிட்டு, குழந்தையுடன் திரும்பி வரும் போது, போலீஸின் என்கவுண்டரில் கிராஸ் ஃபயரில் பலியாகிறார் விஜித்.
இதனால் நிர்க்கதியாக நிற்கும் கயல் ஆனந்தி, தனது தோழியின் ஐடியாப்படி, வேறு வழியே இல்லாமல் விபச்சாரத்தில் இறங்க தயாராகிறார். முதல் சவாரியே அந்த சைக்கோ கில்லர் ஆர்.கே.சுரேஷுடன் தான். அதன் பின் கயல் ஆனந்தியின் கதி என்ன? என்பதற்கு விடை தான் இந்த ‘ஒயிட் ரோஸ்’.
இளம் பெண்ணின் பிணத்துடன் மட்டுமே உடலுறவு கொண்டு, கொல்லும் சைக்கோ கில்லராக ஆர்.கே.சுரேஷ் ரொம்பவே நச்சுன்னு பொருந்திப் போகிறார். இவருக்கு ஏன் இந்த கொடூர வியாதி என்பதற்கான ஃப்ளாஷ்பேக்கை கச்சிதமாக மேட்ச் பண்ணியிருக்கார் டைரக்டர் கே.ராஜசேகர். மொத்தமே பத்து வரிகள் தான் ஆர்.கே.சுரேஷுக்கு வசனம். டாக்டர் அஞ்சலியாக வரும் ஹஷினும் ஆனந்திக்கு விபச்சார ஐடியா கொடுக்கும் தரணி ரெட்டியும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் ஆனந்தியிடம் தரணி ரெட்டி பேசும் வசனங்கள், சாட்டையடி ரகம். சபாஷ் டைரக்டர் ப்ரோ.
போலீஸ் அதிகாரியாக வரும் ரூசோ ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டராக வரும் சசிலயா உட்பட போலீஸ் அனைவருமே நல்லவர்களாக வருவது கொஞ்சம் ஆறுதல். எண்கவுண்டர் கிராஸ்ஃபயரில் பலியானது கயல் ஆனந்தியின் கணவன் தான் என்பது தெரிந்ததும், ரூசோவின் உதவும் மனம் கவனிக்க வைக்கிறது. சசிலயாவும் செம கெத்து காட்டுகிறார். ரவுடி சிங்கப்பெருமாளின்( ராஜசிம்மன்) முழங்காலில் சுட்டு, கயல் ஆனந்தியின் குழந்தையை மீட்கும் சீனில் அதகளம் பண்ணியிருக்கார் சசிலயா.
பெரும்பாலான சீன்கள் இரவு நேரத்தில் நடப்பதால், அதற்கான உழைப்பைச் சரியாக கொடுத்திருக்கார் கேமராமேன் வி.இளையராஜா. க்ரைம் த்ரில்லிங்கிற்கு கியாரண்டி தந்திருக்கிறார் மியூசிக் டைரக்டர் சுதர்ஷன்.
சில பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ அட்ராக்ட் பண்ணுகிறது.
மதுரை மாறன்