வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் ! புதிய தொடர் ஆரம்பம் !
பகுதி - 1
வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்!
யானையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போகாதவர்கள் எவரும் இல்லை. அத்தனை பெரிய உருவம் கொஞ்சமாகவா உண்ணும். வளர்ந்த ஒரு யானை ஒரு நாளைக்கு 250 கி முதல் 300 கி வரை உணவு உண்ணும். அதுப் போல 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் தண்ணீரும் தேவையெனில் ஒரு பெரிய யானைக் கூட்டத்திற்கு எவ்வளவு தேவைப்படும்.
அப்படியானால் ஒரு யானைக்கூட்டம் ஒரே இடத்தில் இருந்தாலும் காடு அழிந்துவிடும் அல்லவா? இயற்கையாவவே ஒரு யானைக்கூட்டம் இடம் விட்டு இடம் நகரும் தன்மை கொண்டது. அப்படி ஒரு வாழிடத்திலிருந்து இன்னொரு வாழிடத்திற்கு செல்லும் பாதையைத்தான் வழித்தடம் என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் corridor என்பார்கள். அதுப்போல் வாழிடத்தை habitat என்கிறோம்.
காட்டில் யானைகளே வழிகளை தோற்றுவிக்கின்றன. பின்னர் இந்த வழியை மற்ற விலங்கினங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. யானைகள் சாலைகளை கடப்பதில்லை. காடுகள்தான் சாலைகளை கடக்கின்றன. ஒரு நாளின் வேளையில் 18 மணி நேரம் நடந்துகொண்டே உணவு உண்ணும். குறைந்தது 10 கிமீ முதல் 70 கிமீ தூரம் வரை ஒரு நாளில் கடந்து விடும்.
அப்படி காட்டில் நடக்கும்போது யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம். யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.
யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன்பெறுகின்றன. யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு, தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல், காட் டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக அது கடந்து செல்லும் தனது பாதையை ஒருபோதும் அவைகள் மாற்றிக் கொள்ளாது. சுற்றுச்சூழலின் அடையாளம் யானை, காடுகளின் செழுமைக்கு அடையாளமான. விதை பரவுதல், காடுகள் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு என அனைத்திற்கும் யானைகள் முக்கியமனதாக உள்ளது. யானைகள்தான் இயற்கையின் ஆதார உயிர். இது இருந்தால் மட்டுமே மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகும் .
(தடங்கள் தொடரும்)
ஆற்றல் பிரவீன்குமார் சிறு அறிமுகம்!
கட்டுரையாளர் ஆற்றல். பிரவீண் குமார், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை பூர்வீகமாக கொண்டவர். வேலூர் வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் எம்.டெக். (பயோடெக்னாலஜி) மற்றும் எம்.பி.ஏ. நிறைவு செய்திருக்கிறார். சூழல் செயல்பாட்டாளர், கதை சொல்லி, யானை ஆராய்ச்சியாளர், சுட்டியானை சிறுவர் இதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.
கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகள் சார்ந்தும் யானைகள் மற்றும் பறவைகள் சார்ந்தும், இயங்கி வருகிறார். கானகக் கல்வி மற்றும் வகுப்பறைக்குள் யானை வரவேண்டும் என்னும் நிகழ்வை இதுவரை 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிகழ்த்தியிருக்கிறார்.
யானை மனித எதிர்கொள்ளல் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து அரசு அமைப்புடன் சேர்ந்து இயங்கி வருகிறார். ஆறுகளைப் பாதுகாக்கும் என்னத்துடன் பாலாறு வனம் மற்றும் தகடூர் இயற்கை அறக்கட்டளை போன்ற அமைப்புகளை ஊருவாக்கு பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். பல்லாயிரம் எழுத்தாளர் களைக் கொண்ட படைப்பு குழுமம், இந்த ஆண்டின் சிறந்த சூழலியலாளர் விருதை இவருக்கு கொடுத்து கவுரவித்துள்ளது.