பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி – 5

0

பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை!

தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்கிறது. இதன் சராசரி மழையளவு 1150 மில்லிமீட்டர் முதல் 1660 மி.மீ. வரையாகும். ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தென்பகுதியில் சராசரி மழையளவு 600 மி.மீ. முதல் 1050 மி.மீ. வரைதான் உள்ளது.

2 dhanalakshmi joseph

வெப்பநிலையைப் பொறுத்தவரை 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ்வரை காணப்படுகிறது. குளிர்காலங்களில் குறைந்த பட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரைகூட வெப்பநிலை இருக்கிறது. சிறுசிறு மலைகளாக அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மகாநதி மேல்பகுதி துவங்கி ஒரிசாவின் வடக்கு எல்லை வரையிலான மலைப்பகுதியை வடக்குப் பகுதி என்கின்றனர்.

இதில் சிமிலிபால், குல்திகா, ஹாட்க்ஹர், ஜெய்ப்பூர் ஆகிய மலைப்பகுதிகள் உள்ளன. மகாநதியில் இருந்து கோதாவரி நதி வரையிலான பகுதி இரண்டாவது பிரிவாக உள்ளது. இப்பகுதியில் கபிலாஸ், சப்தசஜ்வா, பெர்பேரா, கோந்த்மலை, லக்காரி பள்ளத்தாக்கு, கார்லாபாத், பாய்சிபள்ளி, பாப்ளிமலி, மகேந்திரகிரி, டியோமலி, கொண்டாகம்பேறு, சைலேறு மேல்பகுதி, அராக்கு, அனந்தகிரி, சிந்தாபள்ளி, சப்பார்லா, குதேம், சாம்பாரிகொண்டா, லங்காபகாலா, கோதாவரி மேல்பகுதி, மோதுகுதேம் ஆகிய மலைப்பகுதிகள் அமைந்துள்ளன. கிருஷ்ணா நதியில் இருந்து சென்னை வரையிலான பகுதியில் நல்லமலை, வெளிகொண்டா, சேசாச்சலம், நிகிதி, கொண்டபள்ளி ஆகிய மலைப்பகுதிகள் அமைந்துள்ளன.

- Advertisement -

- Advertisement -

கிழக்குத் தொடர்ச்சிமலையின் தெற்குப் பகுதியாக சென்னை முதல் நீலகிரிவரை மற்றும் வைகை ஆற்றுப் பகுதிகள் இருக்கின்றன. இதில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, ஜவ்வாது மலை, பச்சமலை, மேலகிரி, கல்வராயன், சிறுமலை, பில்கிரிரங்கன் மற்றும் கோலார் ஆகிய மலைகள் அமைந்துள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 75 குடும்பங்களை சேர்ந்த 2500 தாவர இனங் கள் உள்ளதாகவும், 271 இனங் களைச் சேர்ந்த 528 வகையான மரங்கள் காணப் படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் காட்டுயானைகள் அதிகமாக இம்மலைத் தொடரில் காணப்படுகின்றன. சிறுத்தை, புலி, காட்டு எருமை, கரடி, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், சுண்டெலி மான், காட்டுப்பன்றிகள், நரி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகுப்பூனை, குரங்கு, பறக்கும் அணில் உள்ளிட்ட விலங்குகளும் நாரை, வண்ணக் கொக்கு, காடை, கவுதாரி போன்ற பறவை இனங்களும், நீர்நிலைப் பறவைகள், முதலை மற்றும் பாம்பு வகைகளும் காணப்படுகின்றன.

4 bismi svs

ஆற்றல் பிரவீன்குமார்

(தடங்கள் தொடரும்)

– ஆற்றல் ப்ரவின் குமார் (யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்)

முந்தைய தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்…

இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! (பகுதி – 4)

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.