இத்தனையும் செய்தது ஒரு தனி மனிதர் சவுக்கு சங்கரா ?

குஷ்பூவை மணியம்மையாகவும், கலைஞரைப் பெரியாராகவும் சித்தரித்த

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது – செய்தி

சவுக்கு விசிறிகள் :

1. இதெல்லாம் எப்படிங்க சவுக்கு சங்கருக்கு முன்கூட்டியே தெரியுது ?

2. எதிர்க் கட்சிகள் செய்ய முடியாததை தனி மனிதர் சவுக்கு சங்கர் செய்கிறார்.

3. இந்த மாசத்துக்குள்ள அரெஸ்ட் பண்ணி காண்பிக்கிறேன்னு சொன்ன சவுக்கு சங்கர் செஞ்சே காமிச்சிட்டாரு

4. சவுக்கைப் பகைச்சவன் இருக்க முடியுமா ?

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இப்படி சவுக்குவை சினிமா கதாநாயகன் ரேஞ்சுக்கு அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது அந்த விசிறிக் கூட்டம். இவை எல்லாம் உண்மையா ? இத்தனையும் செய்தது ஒரு தனி மனிதர் சவுக்கு சங்கரா ? இப்படி சிலர் என்னிடம் கேட்டதுடன் இதுபற்றி விளக்கி எழுதுமாறும் கேட்டனர்.

இதன் பின்னணி பற்றி விரிவாக ஒருநாள் எழுதுகிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல முடியும். அதுவும் திமுகவின் உள்ளடி அரசியல் பற்றி. குமுதம் ரிப்போட்டர் இதழின் அட்டைப்படத்தில் ஒரு நாள் கலைஞர் கருப்பு சட்டையில் அமர்ந்திருக்க, கருப்பு புடவையில் குஷ்பூ நின்றுகொண்டிருப்பது போன்ற படம். தலைப்பு “இன்னொரு மணியம்மை ?”

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

குஷ்பூவை மணியம்மையாகவும், கலைஞரைப் பெரியாராகவும் சித்தரித்த கட்டுரைத் தலைப்பு அது. புத்தகம் வெளியாகிப் பெரும் பரபரப்பு. அன்று மாலை சென்னை பிரெஸ் கிளப்பில் அந்தக் கட்டுரை எழுதிய செய்தியாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் கேட்டேன்.இப்படி ஒரு கட்டுரை. திமுக தரப்பில் இருந்து உங்களுக்குப் பிரச்சனை ஏதும் இல்லையே என்று கேட்டேன். அவர் பதில் சொன்னார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“படமும், செய்தியுமே கலைஞர் குடும்பத்தினர் தந்ததுதான்” என்றார். ஆக….. சவுக்கின் இந்த சவடால் கூச்சல்களுக்கு இடையில் இன்னொன்றை எத்தனை பேர் கவனித்தீர்கள் ?! பழனிவேல் தியாகராஜன் கசிய விட்ட “அந்த 30 ஆயிரம் கோடி… மகன், மருமகன்” போன்ற செய்திகளெல்லாம் பின்னுக்குப் போக செந்தில் பாலாஜி மட்டும் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

மற்றபடி பத்திரிகை ஊடகத்துறையில் குறிப்பாக crime beat எனும் குற்றம் சார்ந்த செய்திகளை மட்டுமே பார்க்கும் செய்தியாளர்களுக்கு சவுக்கை விட 200 மடங்கு தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்லி சினிமா கதாநாயகன் போல பில்ட் அப் செய்து கொள்வதில்லை உண்மையான பத்திரிகை – ஊடகவியலாளர்கள்.

வருமான வரித்துறை வந்தால் பின்னாடியே அமலாக்கத் துறை வரும் என்பது பாஜக ஆட்சிக்கு வந்த காலம் முதலே இருக்கும் பாஜக ஸ்டைல்தான். இது ஒன்றும் அதிசயமல்ல. அதுமட்டுமல்ல காங்கிரசின் ஸ்டைல்தான் இது. காங்கிரஸ் ஆட்சியில் மேல் மாடியில் சோதனை கீழே கலைஞரிடம் தொகுதி பேரம் நடக்கவில்லையா ?!

ஆக…..

– வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத், பத்திரிகை – ஊடகவியலாளர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.