சிவகாசி அருகே இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு !

0

சிவகாசி அருகே இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு !

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆரியா என்ற பட்டாசு ஆலை 80 மேற்பட்ட அறைகளைக் கொண்டு மாரனேரி பகுதிக்கு உட்பட்ட ரெட்டியாபட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது,

2 dhanalakshmi joseph

தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை செய்து கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் அறையில் இருந்த ஒருவர் மட்டும் பலியானதாக கூறப்படுகிறது, மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 பேர் உடல் கருகி உயிரிழப்பு
10 பேர் உடல் கருகி உயிரிழப்பு
- Advertisement -

- Advertisement -

4 bismi svs

அதேபோல் கங்காகுளம் பகுதியை சேர்ந்த கணேசன் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான சிவகாசி அருகே உள்ள
எம். புதுப்பட்டி ரெங்கபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கனிஷ்கர் என்ற பட்டாசு ஆளையில் அருகிலேயே விற்பனை செய்யும் கடையும் இருந்துள்ளது, சம்பவத்தின் போது உற்பத்தி செய்த வெடிகளை மாதிரிக்காக எடுக்கப்பட்டு சரியாக வெடிக்கிறதா என பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் உள்ள அறையில் தீப்பற்றிய மாதிரி பட்டாசுகள் உள்ளே விழுந்து அறையில் தயார் செய்யப்பட்டு இருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடிக்க தொடங்கவே அப்போது பணியில் இருந்த 20க்கும், மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,

பலர் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என சொல்லப்படுகிறது,

மேலும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டனர், மேலும் கட்டிட ஈடுபாட்டிற்குள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும் இந்த விபத்து குறித்து M.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் குடோன்கள் ஆலைகள் வெடி விபத்துக்குள் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது முடிவே இல்லாமல் தொடர்கதையாகி வருகிறது,

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.