105 வது பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடி ரகசியத்தை சொன்ன மூதாட்டி !
105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த 105 வயது நிரம்பிய மூதாட்டி முத்துப்பிள்ளை என்பவருக்கு அவரது உறவினர்கள் கூடி கேக் வெட்டி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மூதாட்டி இடம் ஆசி பெற்று சென்றனர்.
ஐந்து தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி முத்து பிள்ளைக்கு 6 பிள்ளைகள் என பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி, எள்ளு பேத்தி, என மொத்தம் 85 பேர் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர் இந்த நிலையில் அவரது குடும்பத்தார் 105 வயது நிரம்பியதை முன்னிட்டு முத்து பிள்ளைக்கு தைக்கால் தெரு பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பூரண கும்ப விழா எடுத்து ஆசிர்வாதம் பெற்றனர்.
மூதாட்டி முத்துப்பிள்ளையோ கேழ்வரகு, பழைய சோறு, சிறுதானிய உணவுகள் வெங்காயம் போன்ற ஆரோக்கியமிக்க உணவுகளை உட்கொண்டதாலேயே நோயற்று வாழ்ந்து வந்ததாக உற்சாகமுடன் தெரிவித்தார். பிறந்தது முதல் தற்போது வரையில் மருத்துவமனைக்கு சென்றதில்லை என்று தெரிவிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்