ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் மூவர் பலி : ஆற்றில் இறங்க சொன்ன A1 பட்டருக்கு முன் ஜாமீன் !

0

ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் மூவர் பலி : ஆற்றில் இறங்க சொன்ன A1 பட்டருக்கு முன் ஜாமீன் !

திருச்சி, ஸ்ரீரங்கம் ”ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுல” மாணவர்கள் மூவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த விவகாரத்தில், குருகுலத்தின் நிறுவனர் பராசர பத்ரி நாராயண பட்டருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது, மதுரை உயர்நீதிமன்றக்கிளை. தண்டனை என்ற பெயரில், மைனர் சிறுவர்களை கொள்ளிடம் ஆற்றுக்கு அனுப்பி வைத்த குருகுல நிர்வாகம்தான் மூவர் சாவுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை, இறந்துபோன மாணவர்களின் பெற்றோர்களின் கருத்தையும் கேட்டறிந்து விரிவான செய்தியாக அங்குசம் இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

2 dhanalakshmi joseph

முந்தைய செய்திக்கான லிங்க்:

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் ! விலகாத மர்மங்கள் !!

- Advertisement -

- Advertisement -

குருகுல நிறுவனர் பராசர பத்ரி நாராயண பட்டர், தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, அப்போதே திமுக அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்தது; பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டது என பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார் என்பதையும் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், குருகுல நிர்வாகி பத்ரிநாராயணன், குருகுல பொறுப்பாளர் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ’தேடி வந்த’ நிலையில், அவர்கள் இருவரும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

அமைச்சர் நேருவை நேரில் பார்த்த பத்திரிபட்டர்
அமைச்சர் நேருவை நேரில் பார்த்த பத்திரிபட்டர்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆஜராகி, ”அவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லப்பட்டுள்ளது. அப்போதுதான் உயிரிழப்பு நடைபெற்றுள்ளது. எனவே, இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

4 bismi svs

”குருகுல மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் சந்தியாவந்தனம் செய்யவே சென்றார்கள் என்றும்; கொள்ளிடம் ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிட்டதே காரணம் என்றும்; மனுதாரர்களுக்கும் இந்த உயிரிழப்புக்கும் சம்பந்தம் இல்லையென்றும்” வாதிட்டிருக்கிறார், குருகுல தரப்பு. இங்கெல்லாம், வக்கீலே இல்லையென்று, டெல்லியிலிருந்து, சீனியர் வழக்குரைஞர் ஒருவரை இறக்கியிருக்கிறது, பட்டர் தரப்பு.

”பத்ரிநாராயணனுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை” என்று கூறி, 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியிருக்கிறது, மதுரை உயர்நீதிமன்றக்கிளை. குருகுல பொறுப்பாளர் ஸ்ரீனிவாசராவுக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

பத்திரி பட்டர்
பத்திரிபட்டர்

”சர்வ சாதாரணமாக கொலை செஞ்சிட்டு போறவனேயே, செல்போன் டவரை வைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே பிடித்து விடுகிறார்கள். கடந்த 40 நாட்களாக பட்டரையும் சீனிவாசராவையும் பிடிக்க முடியவில்லை என்று போலீசார் சொல்வதை நம்ப இயலவில்லை. முதல் குற்றவாளியே பட்டர்தான். அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. குருகுல பொறுப்பாளருக்கு மறுக்கப்படுகிறது. பட்டர் வெறும் நிறுவனர் மட்டும்தானாம்; மற்றதெல்லாம் பொறுப்பாளர்தானாம்…

வழக்கறிஞர் ஆனந்தராஜ்
வழக்கறிஞர் ஆனந்தராஜ்

எந்த தண்டனையாக இருந்தாலும் குருகுலத்திலே வைத்து வழங்குங்கள். கொள்ளிடம் ஆற்றுக்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்று பெற்றோர்கள், பட்டரிடம்தான் கெஞ்சியிருக்கிறார்கள். கொஞ்சம் கூட, ஈவிரக்கம் இல்லாமல், வேண்டுமானால் ஆளுக்கு ஒரு இலட்சம் கட்டிவிட்டு உங்கள் பிள்ளைகளை கூட்டிச் செல்லுங்கள் என்று சொன்னவர்தான் பட்டர். அப்படியிருக்கையில், அவரை எப்படி விடுவிக்க இயலும். இன்றுவரையில், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அவரது முன்ஜாமீனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம்.” என்கிறார், இறந்துபோன மாணவர்கள் தரப்பில் வழக்குகளை கையாண்டு வரும் வழக்கறிஞர் ஆனந்தராஜ்.

– ஆதிரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.