அரசு வேலை வாங்கி தருவதாக 26,45,000 ரூபாய் மோசடி செய்த ஆசிரியர் கைது !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அரசு வேலை வாங்கி தருவதாக 26,45,000 ரூபாய் மோசடி செய்த ஆசிரியர் கைது.

தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த ராஜா உள்ளிட்ட பலரிடம் ரூபாய் 3,50,000 வீதம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த கிருபானந்த தயாநிதி உட்பட நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்டம் கோட்டூர் கிருபானந்த தயாநிதி, மனைவி மணிமேகலை, சேலம் முத்துவேல், இம்மானுவேல் ராஜசேகர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் புகார்தாரர்கள் ஒவ்வொருவரிடமும் 3,50,000 ரூபாய் வாங்கி அரசு வேலை வாங்கி தராமலும்
பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய, ரூபாய் 26,45,000 தராத காரணத்தால் இன்று 24.06.2023  தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிருபானந்த் தயாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5
Leave A Reply

Your email address will not be published.