சொத்தைப் பிடுங்கி மாமியாரை அடித்து துரத்திய திருச்சி துணைச் சேர்மன்
சொத்தைப் பிடுங்கி மாமியாரை அடித்து துரத்திய திருச்சி துணைச் சேர்மன்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தன் இவரது மனைவி தையலை( வயது-62), என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில் தனது கணவர் இறந்து 34 வருடங்கள் ஆகின்றன. எனக்கு 2 மகன்கள் ஒரு மகள் இருந்து வருகின்றனர்.
மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணமாகிய நிலையில், ஒருவர் சென்னையில் இருந்து வருகிறார்.
மூத்த மகன் சக்திவேல் என்பவர் குடும்பத்துடன் நான் இருந்த வீட்டில் வசித்து வருகின்றன.
எனது மகள் முத்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் என்னுடன் இருந்து வந்தார்.
இந்நிலையில் 25/05/2021 அன்று எனது பெரிய மகன் சக்திவேல் அவரது மனைவி புவனேஸ்வரி,
நான் எனது சொந்த செலவில் பயிரிட்டு, அறுவடை செய்து இருந்த பணத்தினை கேட்டனர்.
நான் தர மறுத்தேன், எனது மகளுக்கு திருமண செலவிற்காக சேர்த்து வைப்பதாக கூறினேன்.
அதற்கு அவர்கள் என்னையும் என் மகளையும் சைக்கிள் டயர், விளக்கமாறு, கட்டை கொண்டு கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளினர்.
கடந்த இரண்டு மாத காலமாக எனது மூத்த மகன் சக்திவேலும், இளைய மகனும் சேர்ந்து வீட்டை விற்பதற்காக என்னிடம் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அதற்கு நான் கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை.
இதை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு எனக்கு சாப்பாடு போடாமல் எனது மகளையும் கவனித்துக் கொள்ளாமலும், எப்ப பார்த்தாலும் திட்டு வதோடு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனது கணவர் இறந்த பிறகு புத்தூர் மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து என் மூன்று பிள்ளைகளையும், படிக்கவைத்து ஆளாகினேன்.
எனது உழைப்பில் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டினை கட்டினேன். 6 ஏக்கர் நிலம் வாங்கி, 1 1/4 ஏக்கருக்கு நெல் பயிரிட்டேன்.
அதில் வரும் வருமானத்தை வைத்து எனக்கும் எனது மகளுக்கும் செலவுகளை செய்து வந்தேன்.
இந்நிலையில் எனது மகன் சக்திவேல் அவரது மனைவி புவனேஸ்வரி பேச்சை கேட்டுக்கொண்டு, எங்களை அடிப்பதும் துன்புறுத்துவதுமாய் இருந்து வருகின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தாள் எனது மகனின் மனைவி புவனேஸ்வரி மணிகண்டம் துணை சேர்மன் ஆக இருந்து வருவதால், எல்லாரிடமும் பேசி எந்த ஒரு நியாயமும் வழங்காத அளவுக்கு தட்டிக் கழித்து வருகின்றனர்.
தற்போது எனது வீடு, எனது மகளுக்காக சேர்த்து வைத்த நகை பணம் முதலியவற்றை அவர்கள் வைத்துக்கொண்டு தர மறுக்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அங்குசம் செய்திக்காக தையலை அவர்களது மூத்த மகன் சக்திவேலிடம் பேசினோம்.
எனக்கும் என் அம்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை,
அவர்களை எனது தங்கச்சி தவறாக வழி நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக என் மீதும், என் மனைவி மீதும் தவறான புகார் அளித்துள்ளனர்.
என் மீது அளித்த புகாருக்கு நான் ஏபி அப்ளை பண்ணிருக்கேன்.
நானும், என் மனைவியும் அவங்க ரெண்டு பேரையும், புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்காங்க அதனால, அப்ப விசாரித்த இன்ஸ்பெக்டர் என்கிட்ட கேட்டுட்டு தான் வழக்குப் பதிவு செய்தார்.
அதுவும் அவரே ஏபி அப்ளை பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ன்னு சொல்லி தான் வழக்கு பதிவு செய்தார்.
எனது அம்மாவும் தங்கச்சியும் அடுத்தடுத்து கலெக்டர், எஸ்.பி, டிஐஜி னு புகார் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அதனால எம்எல்ஏ பழனியாண்டி மாமாகிட்ட சொல்லியிருந்தேன் அவரே முடித்துவிடுறேனு சொல்லி இருந்தாரு, ஆனா அதுக்குள்ள இவங்க தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விடுறாங்க.
இவங்களுக்கு பின்னாடியே தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு இருந்துகொண்டு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி விடுகிறார் என்றார்.
திருச்சியில் சொத்துக்காக தனது தாயை துரத்தி விட்ட மகன் மருமகளால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
கடைசி காலகட்டத்தில் தன்னால் முயன்றவரை ஆறு மாத காலமாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு அலைந்து வரும் வயதான தாய்க்கு இதுவரை சரியான பதில் வழங்கவில்லை.
நியாயம் என்னவென்று அறிந்தும் காவல்துறை சில அரசியல் புள்ளிகளின் தலையீட்டால் மவுனம் சாய்த்து வருகிறது.
இனி உயிருடன் இருப்பதைவிட உயிரை மாய்த்துக் கொள்ளலாம் எனும் நிலைக்கு சென்றுவிட்டார்.
சட்டத்தை நிலைநிறுத்துமா காவல்துறை!
–இந்திரஜித்
Error: Contact form not found.
– இந்திரஜித்