திருச்சி: கூல்டிரிங்க்ஷ் பவுடரில் கடத்தல் தங்கம் – விமான நிலைய சுங்கத் துறை அதிரடி.
திருச்சி: கூல்டிரிங்க்ஷ் பவுடரில் கடத்தல் தங்கம் – விமான நிலைய சுங்கத் துறை அதிரடி.
திருச்சி விமான நிலையத்தில் சமீபகாலமாகப் பல லட்ச மதிப்புள்ள தங்கக் கட்டிகள் தொடர்ந்து சுங்கத் துறை வசம் சிக்கிய வண்ணம் இருந்து வருகிறது.
காரணம், திருச்சி விமான நிலையத்தில் சமீபத்தில் சுங்கத் துறை உயர் அதிகாரி ரகசிய ஆய்வு மேற்கொண்டதில் சரியாக வேலை பார்க்காத அதிகாரிகளை டோஸ் விட்டது தான் காரணம் என்கின்றனர் உளவுத்துறை வட்டங்கள்.
இந்நிலையில் கடந்த 2022 ஜனவரி 6 ம் தேதி கொலாம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம் (IX 623) என்பதில் பயணித்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது,
அதில் ஒரு பயணி மட்டும் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார், அந்நபரை விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் பதில் அளித்ததால்,
அவருடைய உடைமைகளை ஆய்வு செய்ததில் அதில் எண்ணற்ற டான்க் கூல்டிரிங்ஸ் பவுடர் பாக்கெட் இருந்தது.
அவற்றைப் பிரித்து ஆய்வு செய்தபோது, அதில் 24 கேரட் தங்கக் கட்டிகள் 254.500 கிராம் மதிப்புள்ளது இருந்து கண்டெடுக்கப்பட்டது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டியின் மதிப்பு இந்திய ரூபாயில் 12,34,834/- இருக்கக் கூடும் என்று கூறபடுகிறது. இதுகுறித்து பிடிபட்ட நபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– இந்தர்ஜித்