அம்மாவை காப்பற்ற போன சிறுவன்மீது கொலைவெறி தாக்குதல்- திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது.
அம்மாவை காப்பற்ற போன சிறுவன்மீது கொலைவெறி தாக்குதல்- திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட என். சாத்தனூர் மேலத்தெரு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்.
கடந்த 2022 ஜனவரி 6 ம் தேதி இவரது அக்கா லதா என்பவர் தனது வீட்டு வாசலில் நாய்கள் மலம் கழித்திருப்பதை பார்த்து, இந்த நாய்கள் தொல்லை தாங்க முடியல என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு கொண்டிருந்த சாத்தனூர் கீழத்தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் கணேசன் மற்றும் கீழத்தெருவை சேர்ந்த நாராயணன் மகன் புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே உள்ள கந்து பிரச்சனையை வைத்து திட்டுகிறார் என்று நினைத்து வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.
அப்பொழுது அவ்வழியே சென்ற கண்ணன் மகன் கிக்ஷாந்த் (வயது-7) எனும் சிறுவன் தனது அப்பாவிடம் ஓடிவந்து கூறியுள்ளார். இதையறிந்த கண்ணன், தனது மனைவி ரேணுகாவுடன் சென்று, ஏன் எனது அக்காவை அடித்தீர்கள் என்று கேட்டதற்கு கணேசன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கண்ணனையும் அவரது மனைவி ரேணுகாவையும் தாக்கியுள்ளனர்.
அப்போது தனது அம்மாவை தாக்குவதை பார்த்து கிக்ஷாந்த் காப்பாற்ற முற்பட்டுள்ளார். அப்போது கணேசன் கொச்சை வார்த்தைகளில் திட்டி உங்க அப்பா அம்மாவ அலச்சிட்டு சண்டைக்கு வரியானு, கிழே இருந்த கல்லை எடுத்து சிறுவனின் தலையில் அடித்துள்ளான் இதில் பலத்த காயமடைந்த கிக்ஷாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கணேசன் மற்றும் புகழேந்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தர்ஜித்