திருச்சி : ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் காதலர்களுடன் தப்பியோட்டம்
திருச்சி : ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் காதலர்களுடன் தப்பியோட்டம்
திருச்சி ஏர்போர்ட் டூ கே.கே. நகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது அன்னை ஆசிரமம். இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குழந்தைகள் என 50 க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவின் உத்தரவின் பேரில் இல்ல கண்காணிப்பில் விடப்பட்ட நமிதா , உக்ஷா எனும் 2 சிறுமிகள்,
கடந்த 2022 ஜனவரி 8ந்தேதி காலை 5.40 மணியளவில் விடுதியின் அறையில் இருந்த ஜன்னல் வழியாக தப்பித்து சென்று விட்டதாக இல்ல கண்காணிப்பாளர் உமா என்பவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் போலீசார் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அங்கு உள்ளவர்களிடம் விசாரணை தொடங்கியதுடன்,
போலீசார் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துபோது சிறுமிகள் வீட்டிற்கு வரவில்லை என்றுள்ளனர். அதன்மூலம் கிடைத்த தகவல்களை வைத்து பார்த்தபோது சிறுமிகள் இருவரும் திருமணத்திற்கு முன் காதலித்து வந்ததும், தற்போது அந்நபர்களுடன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுத்தொடர்பாக இல்ல கண்காணிப்பாளர் உமா என்பரிடம் தொடர்புக்கொண்டபோது,
அவரது உதவியாளர் மேடம் பிஸீயாக இருப்பதாகவும், அவரிடம் தகவல் அளிப்பதாக கூறினார். பிறகு எந்தவித அழைப்புக்களும் நமக்கு வரவில்லை.
அரசு கண்காணிப்பில் இருக்கக்கூடிய விடுதியில் இதுப்போன்று சிறுமிகள்அடிக்கடி மாயமாவதும், ஓடிப்போவதுமாய் இருந்து வருவது நிர்வாகத்தின் அலட்சியப்போக்குதான் காரணம் என்கின்றனர் காவல்துறை வட்டாரங்கள்.
-இந்தர்ஜித்