விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், இருக்கன்குடி மேலதெரு, பகுதியைச் சேர்ந்த  மணிகார்த்தி (35) இவரது மனைவி நந்தினி மணிகார்த்திக் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு சம்யுக்தா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அந்தச் சிறுமி சாத்தூரில் செயல்பட்டு வரும், தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சம்பவத்தன்று அருகில் உள்ள மற்ற சிறுமிகளுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

சம்யுக்தா
சம்யுக்தா(5)

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அப்போது அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சார வயர்களை தாங்கிப் பிடிக்கும் இரும்பு கம்பியை பிடித்த போது அதில் மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக சிறுமி தூக்கி கீழே வீசப்பட்டுள்ளார். உடனடியாக மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் அந்தப் பகுதியில் உள்ள அந்த இரும்பு கம்பியில் பல நாட்களாக மின்சாரம் கசிவு இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

மின்சாரம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தமிழ்நாடு அரசு‌ மின்னகம் என்ற 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண் : 9498794987 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அடுத்த சில மணி நேரங்களிலேயே புகாரின் மீது மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

–மாரீஸ்வரன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.