நியோமேக்ஸ் : சட்டப்போராட்டக்குழு நடத்திய ஆலோசனைக் கூட்டம் எதற்காக ?

2

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் மோசடி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழுவின் சார்பில் செப்-29 அன்று மதுரையில் கலந்தாலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள ஸ்ரீவித்யா மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 50-க்கும் அதிகமான முன்னணியாளர்கள் பங்கேற்றனர்.

நியோமேக்ஸில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள், பணத்தை திரும்பப் பெறுவதற்காக, இதுவரை மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கும் சுமார் 8000-க்கும் அதிகமான முதலீட்டாளர்களுள் ஒரு பிரிவினர் இவர்கள். இவர்களைத் தவிர, தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் TNPID act – 5A சட்டவிதியின்படி நிலமாகவே பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை எடுத்துவருவதாக அறிவித்து அவர்கள் தனியே ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இந்த இரண்டு குழுக்களுமே, போலீசில் புகார் கொடுத்தவர்களை மட்டுமே ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. இதுதவிர, இதுவரை போலீசில் புகாரே கொடுக்காதவர்களை மூத்த குடிமக்களுக்கான சங்கம் என்ற பெயரில் திருச்சியைச் சேர்ந்த தியாக சுந்தர்ராஜன் என்பவர் ஒருங்கிணைத்து வருகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதுதவிர, இந்த மூன்று குழுக்களிலுமே இடம்பெறாமல், “இவர்களில் யாரை பின்பற்றி சென்றால் காரியம் ஆகும்? என்பதில் தீர்க்கமான முடிவை எட்ட முடியாமல், என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம். தெளிந்தபிறகு, இணைந்து கொள்வோம் என்பதாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு நபர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கிக்கொண்டு வாட்சப் குழுக்களாக இயங்கி வருகிறார்கள்.

வீடியோ லிங் 

இந்தப் பின்னணியிலிருந்துதான், ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழுவின் சார்பில் சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி, கம்பம் இளங்கோவன் உள்ளிட்ட நபர்கள் முன்னின்று கலந்தாலோசனைக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். 5-ஏ செட்டில்மெண்டை முன்னெடுத்து வரும், தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்கிறார்கள், இவர்கள். நியோமேக்ஸ் வழக்கில், 5-ஏ செட்டில்மெண்ட் கதைக்கு ஆகாது என்பதோடு, நியோமேக்ஸ் நிர்வாக இயக்குநர்களுடன் சமரசமாக சென்று ஒன்றுக்கும் ஆகாத நிலங்களை தலையில் கட்டவே பார்க்கிறார்கள் என்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

”மூன்றாண்டுகளுக்கு முன்பு நாம் ஒரு லட்சம் முதலீடு செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போட்ட அந்த ஒரு இலட்சத்தில் நியோமேக்ஸ் வாங்கி போட்ட நிலத்தின் மதிப்பு இன்று பத்து லட்சமாக உயர்ந்திருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாண்டின் முடிவில், அந்த நிலத்தை இன்றைய சந்தை மதிப்பில்தான் நமக்குத் திருப்பிக் கொடுப்பார்களாம். அதாவது பத்து லட்ச ரூபாய் மதிப்பு. ஆனால், நாம் போட்ட முதலீட்டுக்கு வட்டியும் கணக்கிட மாட்டார்களாம். முதிர்வுத்தொகையும் வழங்க மாட்டார்களாம். நாம் மூன்றாண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்த அதே ஒரு இலட்சத்துக்கு பெறுமான நிலத்தை மட்டுமே எழுதிக் கொடுப்பார்களாம்.

இந்த மோசடிக்கு அந்த சங்கம் துணை போகிறது. இதனைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.” என்பதாக விளக்கம் அளிக்கிறார், சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

 

நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து ஓராண்டை கடந்துவிட்டது. நீதிமன்றமும் இந்த வழக்கை இத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று விரிவான பட்டியலோடு வழிகாட்டுதல்களையும் வழங்கிவிட்டது. ஆனாலும், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை.

இதுவரை, 8000-க்கும் அதிகமானோர் புகார் கொடுத்திருக்கும் நிலையில், வெறும் 2500-க்கும் குறைவானோர்களுக்கு மட்டுமே சி.எஸ்.ஆர். பிரதியே கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக சி.எஸ்.ஆர் கொடுப்பதையே நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் வலியுறுத்தி சொன்ன பிறகே. தற்போது கொடுத்து வருகிறார்கள். கேட்டால், ஆட்கள் இல்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்கள்.

வீடியோ லிங்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அடுத்து இதுவரை மிகவும் சொற்பமான இடங்களைத்தான் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றுள் பகுதியளவுத்தான் அட்டாட்ச்மெண்ட் செய்திருக்கிறார்கள். வெறும் 15 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை விற்பதற்குத்தான் ஜி.ஓ. போட்டிருக்கிறார்கள். இந்த ஓராண்டு காலத்தில் வெறும் 15 கோடி ரூபாய் அளவுக்குத்தான் மீட்க முடிந்திருக்கிறதென்றால், 1500 கோடி ரூபாயை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளை கடத்துவார்கள்? அதனால்தான், நீதிமன்றத்தில் முறையிடுவது என முடிவெடுத்திருக்கிறோம்.

neomax - Md
neomax – MD

மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசுக்கு எதிராக என்று சொல்ல முடியாது. அவர்களின் வேலையை சுலமமாக்குவதற்கு நாங்களும் அவர்களோடு இணைந்து செயல்பட்டு வழக்கை விரைந்து முடிப்பது என்பதற்காகவே, வழக்கு தொடுக்கிறோம். அவர்களின் மேல் அதிகாரியின் ஒப்புதல் இன்றி அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே, அதனை நீதிமன்றத்தின் உத்தரவாக பெற்று, அதன்படி செயல்பட வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
முதல்கட்டமாக, புகார் கொடுத்த 8000- பேரிடமிருந்தும் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து போதுமான விவரங்களைப் பெற்று நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் எங்குங்கெல்லாம் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறோம்.

அந்த முழுமையான சொத்துக்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இவற்றையெல்லாம் உறுதிபடுத்தி அட்டாட்ச்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்யப்போகிறோம்.


அடுத்த வழக்காக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. அவற்றையும் மாவட்ட வாரியாக கணக்கெடுத்து வைத்திருக்கிறோம். அவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அந்த சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு அடுத்த வழக்கு.
மூன்றாவதாக, சமீபத்தில் தனிப்பட்ட முறையில் சிலர் தொடுத்த வழக்குகளில் ஏஜெண்டுகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய சொல்லி அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவை தனிப்பட்ட வழக்குகள் என்பதால், அவர்கள் குறிப்பிட்ட தனிப்பட்ட ஒரு ஏஜெண்டை மட்டுமே அந்த தீர்ப்பு கட்டுப்படுத்தும். அதை நாங்கள் விரிவு செய்கிறோம். இந்த 8000-பேரும் யார் யார் வழியாக, எந்த ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்தார்களோ, அந்த ஏஜெண்டுகளின் விவரங்களை திரட்டி அவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்ய சொல்லி, அவர்களது சொத்துக்களையும் அட்டாச் செய்ய சொல்லி மூன்றாவதாக ஒரு வழக்கை தாக்கல் செய்யப்போகிறோம். மேலும், இதில் பினாமி பெயர்களில் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கிப்போட்டிருக்கிறார்களோ? எஃப்.ஐ.ஆர். போட்டபிறகும்கூட, உன்னால் முடிந்ததைப் பார் என்று எங்களுக்கு சவால்விட்டு பல நிலங்களை விற்றிருக்கிறார்கள்.

விற்ற நிலங்களையும் உள்ளிட்டு மொத்த பினாமி சொத்துக்களையும் அடையாளம் கண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவற்றையும் அட்டாச் செய்யுமாறு கோரிக்கை வைக்கப்போகிறோம்.” என்பதாக விளக்கமளித்திருக்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து பார்வையாளர்களிடையே கருத்து கேட்கப்பட்டது. பலரும் அந்தக் கருத்தை ஆமோதித்து, ஒப்புதல் வழங்கினார்கள். சிலர், தங்களது ஆலோசனைகளையும் கூடுதலாக வழங்கினார்கள். நிறைவாக, இதுபோன்ற ஆலோசனைக்கூட்டங்கள் மாதந்தோறும், மாவட்டங்கள் தோறும் நடத்துவது என்றும் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

வீடியோ லிங்

நிறைவாக, “நாம் இங்கே கூடியிருக்கும் நூறு பேருக்கான தீர்வாக மட்டும் இல்லை. மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்த 8000- பேர் சார்பாகவும்தான் இந்த வழக்கை தாக்கல் செய்கிறோம். நம் கோரிக்கையில் நாம் வெற்றிபெற்றால், அதனால் பலனடையப்போவது, நம்மை எதிரியாக கருதுபவர்களையும் உள்ளிட்ட அந்த 8000 பேரும்தான்.

பொதுநல நோக்கிலிருந்துதான், வழக்கை விரைந்து முடித்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில்தான் மிக முக்கியமாக சட்டவிரோதமான முறைகளில் செல்லாமல், சட்டரீதியான போராட்டங்களின் வழியாக தீர்வை எட்ட வேண்டும் என்பதே எங்களது ஒருங்கிணைப்பு குழுவின் நோக்கம். யார் எது சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், நாங்கள் எங்கள் முயற்சியில் தொடர்ந்து இயங்குவோம்” என்கிறார்கள் சிவகாசி ராமமூர்த்தி, கம்பம் இளங்கோவன், தெய்வேந்திரன், சிவகங்கை மாயக்கண்ணன் உள்ளிட்டோர்.

லாஸ்ட் புல்லட் :
இந்தக்கூட்டத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள். மொத்தம் எத்தனை பேரிடம் வசூலித்திருக்கிறார்கள்? எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள்? எப்படியெல்லாம் சட்டவிரோதமான முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்? நியோமேக்ஸ் நிர்வாக இயக்குநர்களுடன் கள்ளக்கூட்டில் இருப்பவர்கள் யார்? 27 புராஜெக்டுகளின் பின்னணி என்ன? அந்த “பெண்டிரைவ்” ரகசியம் உள்ளிட்டு பல விசயங்களை போட்டு உடைத்திருக்கிறார்கள். முழுமையான வீடியோ நேர்காணல் அங்குசம் இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும்.

—அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

2 Comments
  1. Prince says

    How to join in that group?
    I am affected by neomax.

    1. J.Thaveethuraj says

      உங்கள் தொடர்பு எண் அங்குசம் வாட்ச்ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள் – நாங்கள் நியோமேக்ஸ் போராட்ட குழுவினர்களின் தொடர்பு எண் அனுப்புகிறோம்..

Leave A Reply

Your email address will not be published.