நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை !
நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை ! முதல் தள பால்கனி அருகில் நின்று குழந்தைக்கு சோறூட்டியிருக்கிறார். அவரது கையிலிருந்து குழுந்தை வழுக்கிச் சென்ற சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து. இது போன்ற விசித்திர நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் ஒன்றாவது இருக்கும்.
இதில் குழுந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டாலும் சமூகம் இவரை விடவில்லை. வீடியோ எடுத்துப் பரப்பியது. அந்த அபார்ட்மென்ட் கிழவிகளை பேட்டி கண்டது. எந்த அம்மாவது இப்படிப் பண்ணுவாங்களா என நஞ்சு பாய்ச்சியது.
இந்த அவதூறுகளால் குழந்தையின் தாய் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆன்லைனில் உளவியல் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இத்தனையிலும், வீடியோவும் அவதூறுகளும் நிற்கவே இல்லை. இது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. குற்ற உணர்விற்கு தள்ளியிருக்கிறது.
இதிலிருந்து தப்பலாம் என குழந்தைகளுடன் சென்னையில் இருந்து காரமடைக்கு தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கும் இது தொடர, ஒரு பலவீனமான சூழ்நிலையில் த/ற்கொ/லை செய்து கொண்டார். இப்போது இரு குழந்தைகளுக்கும் அம்மா என்றுமே இல்லை. என்ன கொடுமை.
சமூக வலைதளங்களில் நாம் இடும் ஒற்றைக் கமெண்டுகள், முன்முடிவுகள் ஒருவரைக் கொல்லுமா என்றால் அதற்கு ரம்யாவின் மரணமே சாட்சி. இது நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொ..லை. நம்மை நாமே செருப்பால் அடித்துக் கொண்டு சற்றேனும் திருந்திக் கொள்ள வேண்டும்.உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும் ரம்யா. We are sorry !
முகநூலில் : ஹரிஹரசுதன் தங்கவேலு.